cinema Latest News News Tamil cinema

பூஜையுடன் தொடங்கிய பிரபுதேவா & ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படம்!

நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது. குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கியவர் கல்யாண். இந்த இரண்டு படங்களுமே ப்ளாப் என்றாலும் மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது. படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.Read More

cinema Indian cinema Latest News News

சீயான் 60 கடைசி கட்ட படப்பிடிப்பு! எங்க தெரியுமா ?

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடிப்பில் உருவாகி வரும் ’சியான் 60’ படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளது படக்குழு. முதல் கட்ட படப்பிடிப்பு எல்லாம் சென்னையில் நடந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடக்க உள்ளதாம். இதற்காக 93 பேர் கொண்ட […]Read More

cinema Indian cinema Latest News News

‘#PlanB’ படத்தின் மாஸ் வெற்றியை கொண்டாடிய படக்குழு… சந்தோஷத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

மினி ஸ்டூடியோ மற்றும் சிக்ஸர் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் பிளான் பி. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் வெளியிட்டார். விக்னேஷ் கார்த்திக் இயக்கிய இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் சோனி லைவ்வில் வெளியானது. இந்நிலையில் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் நெகட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்துக்கு வரவில்லை. அதனால் […]Read More

cinema Indian cinema

#FIR படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் முடித்துள்ள படம் எஃப் ஐ ஆர். எஃப் ஐ ஆர் படம் பற்றிய அறிவிப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகின. ஆனால் கொரோனா மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஷ்ணு விஷால் படம் பற்றி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் ‘படத்தின் முதல் காப்பி முடிந்துவிட்டது. திரையிட்டுக் காட்டியவர்கள் எல்லாம் நல்ல விமர்சனங்களைக் கொடுத்துள்ளனர். நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மகிழ்ச்சியாக […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய்யின் ‘#பீஸ்ட்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன், தற்போது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.  காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து […]Read More

cinema Indian cinema Latest News News

நம்ம சிம்புவா இது? அதிர்ச்சியான ரசிகர்கள்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிம்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது […]Read More

cinema Gossip Latest News News

‘#செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா ?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷபானா. இவர் தற்போது ‘பாக்கியலட்சுமி’ தொடரில் நடிக்கும் ஆர்யன் என்பருடன் திருமண நிச்சயம் செய்துள்ளார்.  இருவரும் மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தை ஆர்யன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ”அவளது உயிரின் மேல் காதல் வயப்பட்டேன். காரணம், இருவரது புற அழகும் ஒருநாள் காணாமல்போகும்.  ஆனால் உயிர் அப்படியே இருக்கும். அங்கு தான் காதல் வாழும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு சபனா, ”என்னை எப்பொழுதும் நீங்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு!

கடந்த வருடம் சீனாவில் முதன் முதலில் கொரொனா தொற்று உருவாகி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியது. இத்தொற்றின் முதல் அலை முடிந்த நிலையில்  தற்போது இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது..விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#D44’ படத் தலைப்பு ரிலீஸ்….ரசிகர்கள் உற்சாகம்!

தனுஷ் நடித்துவரும் 44வது திரைப்படத்திற்கு திருச்சிற்றம்பலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.   குறிப்பாக இந்த படத்தில் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக முதலில் அறிவித்தது. அதன்பின் இந்த படத்தில் நாயகிகளாக நித்யா மேனன், ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் நடிக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன் தனுஷ் நடிக்கும் ’D44′ திரைப்படத்தின் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !