Tags : cinema update

cinema Indian cinema Latest News News

நயன்தாரா படத்தின் ரீமேக்கில் நடிக்கும் அனுஷ்கா!

‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கத்தில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில், நயன்தாரா நடிப்பில்  உருவான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இப்படத்தில் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும், நடிகை நயன்தாராவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில், ‘நெற்றிக்கண்’ திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. […]Read More

cinema Latest News News Tamil cinema

பிரபல டிவி தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் திடீர் மரணம்!

90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக விளங்கியவர் ஆனந்த கண்ணன். இவர், நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். தமிழில் பிரபலமான சிந்துபாத் சீரியலில் நாயகனாக நடித்த இவர், சரோஜா, அதிசய உலகம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  Ofபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது […]Read More

cinema Indian cinema Latest News News

‘துக்ளக் தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘துக்ளக் தர்பார்’. புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.  அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 18-ந் தேதி மாலை 6 மணிக்கு ‘துக்ளக் தர்பார்’ […]Read More

cinema Indian cinema Latest News News

பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த அப்டேட் இதோ !

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வந்த […]Read More

cinema Indian cinema Latest News News

பா.ரஞ்சித்துக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வடசென்னை மக்களிடையே 70-களில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதே சமயம் எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலையும் இயக்குனர் பா.ரஞ்சித், இப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக அதிமுக தரப்பில் ஏற்கனவே […]Read More

cinema Latest News News Tamil cinema

மணமக்களுக்கு பெட்ரோல் பரிசளித்த #மயில்சாமி!

நடிகர் மயில்சாமி எதையும் வித்தியாசமாக செய்வார் என்பதும் மனதில் பட்டதை ஓபனாக பேசுவார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று சென்னையில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி மணமக்களுக்கு பெட்ரோல் கேன்களை பரிசாக அளித்தார் . பெட்ரோல் மற்றும் டீசலின் உயர்வு குறித்து மத்திய அரசுக்கு கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே பெட்ரோல் பரிசளிப்பதாக கூறினார். தமிழக அரசு பெட்ரோலுக்கான வரியை மூன்று ரூபாய் குறைத்ததற்கு தான் பாராட்டுவதாகவும் அதேபோல் மத்திய அரசு […]Read More

cinema Indian cinema Latest News News

லிங்குசாமி படத்தில் இணைந்த சூர்யா பட வில்லன்!

தமிழில் வாய்ப்புக் கிடைக்காத இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.   இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் ஆதி நடிக்க உள்ளார். ஆதிக்கு ஜோடியாக நடிக்க அக்‌ஷரா கவுடா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவரின் கதாபாத்திரம் திரைக்கதையில் முக்கியமான ஒரு பாத்திரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தில் புது வில்லனாக சிராக் ஜனி இணைந்துள்ளார். இவர் சூர்யா நடித்த […]Read More

cinema Indian cinema Latest News News

அய்யப்பனும் கோஷியும்… தெலுங்கு ரீமேக் … பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பவன் கல்யாண்!

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது […]Read More

cinema Indian cinema Latest News News

பாலிவுட் நடிகை வெளியிட்ட ‘லெஜண்ட் சரவணன்’ நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் அனைவருமே வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில், விளம்பர படங்கள் மூலம் தோன்றி அசத்தி வந்த, சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் வெள்ளித்திரையில் கால் பதித்துவிட்டார். இவர் நடித்த திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக பாதியில் நின்ற நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. ஆக்ஷன் காட்சியில் லெஜெண்ட் சரவணன், பின்னி பெடல் எடுக்கும் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. ஆரம்பகால […]Read More

cinema Indian cinema Latest News News

விக்ரமின் ‘சீயான் 60’ ஃபர்ஸ்ட்லுக்! படக்குழு சொன்ன மாஸ் அப்டேட் !

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வந்த சியான் 60 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சியான் 60 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !