பாலிவுட் நடிகை வெளியிட்ட ‘லெஜண்ட் சரவணன்’ நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

 பாலிவுட் நடிகை வெளியிட்ட ‘லெஜண்ட் சரவணன்’ நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் அனைவருமே வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில், விளம்பர படங்கள் மூலம் தோன்றி அசத்தி வந்த, சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் வெள்ளித்திரையில் கால் பதித்துவிட்டார். இவர் நடித்த திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக பாதியில் நின்ற நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது.

ஆக்ஷன் காட்சியில் லெஜெண்ட் சரவணன், பின்னி பெடல் எடுக்கும் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

ஆரம்பகால விளம்பரங்களில் இவர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் தோன்றியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி ட்ரோல் செய்யப்பட்டாலும், அதனை சற்றும் கண்டு கொள்ளாமல்… தொடர்ந்து அடுத்தடுத்த விளம்பரங்களில் நடித்து மக்கள் மனதில் நிலைத்து விட்டார்.

யாரும் எதிர்பாராத நிலையில் தன்னுடைய முதல் படம் குறித்து அறிவித்தார் சரவணன்.

இந்த படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகை ஊர்வசி ரவ்துலா. அதன்படி சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக பதிவிட்டுள்ள அவர், படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • 1776 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !