Tags : cinema update

cinema Indian cinema Latest News News

எலும்புக்கூட்டை ஆராய்ச்சி செய்யும் ரெஜினா !சூர்ப்பனகை புதிய போஸ்டர் …

சூப்பர் ஹிட் எவரு படத்தில் கடைசியாக நடித்த ரெஜினா கசாண்ட்ரா, தெலுங்கு-தமிழ் இருமொழியான நேனே நாவை நினு வீடணி நீடானு நேனே புகழ் இயக்குனர் கார்த்திக் ராஜுடன் வெளியிட காத்திருக்கிறார். இது ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோவின் ராஜ் சேகர் வர்மா தயாரித்த கதாநாயகியை மையப்படுத்திய படம். படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தின் புரமோஷன்களை தொடங்குவதாக அறிவித்துள்ளனர். சுவரொட்டி ரெஜினாவை தடயவியல் விஞ்ஞானியாகப் பார்க்கிறது. ஆதாரங்களுக்காக அவள் ஒரு எலும்புக்கூட்டை ஆய்வு செய்வதைக் காணலாம். இந்த படத்தில் ரெஜினா […]Read More

cinema Indian cinema Latest News News

ஆதரவற்றோருடன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை!

ஜெயம் ரவியின் ‘பூமி’, சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நிதி அகர்வால். இவர் தற்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் நிதி அகர்வால் நேற்று (ஆகஸ்ட் 17) தனது 28வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்ற நடிகை நிதி அகர்வால், ஆதரவற்ற முதியோர்களுடன் உற்சாகமுடன் கைக்குலுக்கி பேசி மகிழ்ந்து கேக் வெட்டி தனது […]Read More

cinema Indian cinema Latest News News

‘பொன்னியின் செல்வன்’ டீம்! வைரலாகும் போட்டோ!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுவரும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.  ரூ. 800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ்ராஜுக்கு உதவும் சிரஞ்சீவி!

தெலுங்கு நடிகர் சங்க தலைவராக இருக்கும் நரேஷ் பதவி காலம் முடிவதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை ஜீவிதா, விஷ்ணு மஞ்சு, ஹேமா ஆகியோர் நிற்கிறார்கள். கர்நாடகாவை சேர்ந்த பிரகாஷ்ராஜ் போட்டியிடக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் எழுப்பினர். பிரகாஷ் ராஜும் “நான் தெலுங்கானாவில் ஒரு […]Read More

cinema Indian cinema Latest News News

ரஷ்யா செல்லும் படக்குழு …தீபாவளி விருந்தாக வெளியாகிறதா ‘#வலிமை’?

அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஒரு சண்டை காட்சி மட்டும் பாக்கி உள்ளது. அதை இந்த மாத இறுதிக்குள் முடித்துவிட்டு டப்பிங், இசை கோர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க உள்ளனர். வலிமை படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அஜித்குமார் திரையுலகுக்கு வந்து 29 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் வகையில் வலிமை படத்தில் இடம்பெற்ற, ‘நாங்க வேற மாறி’ என்று தொடங்கும் அறிமுக பாடலையும் […]Read More

cinema Indian cinema Latest News News

நெட்பிளிக்ஸில் வெளியாகும் தமன்னாவின் அடுத்த படம்!

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு நவம்பர் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். தென்னிந்தியாவில் வாய்ப்புகள் இல்லாத போதும் அவருக்கு பாலிவுட்டில் இப்போது அதிகளவில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. இப்போது அவர் ரித்தேஷ் தேஷ்முக்கோடு நடித்துள்ள பிளான் ஏ பிளான் பி என்ற படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.Read More

cinema Indian cinema Latest News News

சந்தானத்தின் ’’டிக்கிலோனா’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து காமெடியில் சிறந்து விளங்கியவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில், நடிகர் சந்தானம் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வம் சுந்தரம், சபாபதி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சந்தானம்,  நடிப்பில் உருவாகியுள்ள படம் டிக்கிலோனா, இப்படத்தில் அவருடன் இணைந்து ஷெரின்,அனைகா ஹிரோயின்களாக நடித்துள்ளனர்.மேலும் ஹர்பஜன் சிங் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன் கே இயக்கியுள்ளார்.  இப்பபடம் […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் சிரஞ்சீவியுடன் மோதும் பாலகிருஷ்ணா! யாருக்கு கிடைக்கும் அந்த வாய்ப்பு ?

‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். முந்தைய இரண்டு படங்களும் தெலுங்கில் பெற்ற மாபெரும் வெற்றியால் இப்படத்துக்கும் பாலகிருஷ்ணா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளன்று #பிபி3 என்ற அழைக்கப்படும் இப்படத்துக்கான ஒரு சிறிய டீஸரை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த டீஸர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கொரட்டலா சிவா இயக்கத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படக்குழு, பின் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தியது. பின்னர், இந்தியாவில் ஏற்பட்ட கரோனா இரண்டாம் அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் தடைப்பட்டது. தற்போது இயல்புநிலை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !