cinema Indian cinema Latest News News

ரஜினியின் ’’அண்ணாத்த’’ பட தெலுங்கு போஸ்டர் ரிலீஸ்!

அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழில் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படம் அதே நாளில் தெலுங்கிலும் வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு டப்பிங் பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்து விட்டதாகவும் இந்த படத்தின் தெலுங்கு ரிலீசுக்கு தேவையான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. […]Read More

cinema Indian cinema Latest News News

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் டீஸர் இதோ !

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்து வரும் சூர்யாவின் 39வது படத்துக்கு “ஜெய் பீம்” என பெயரிடப்பட்டுள்ளது. சூர்யா தயாரித்து, நடிக்கும் அவரது 39 வது படத்துக்கு ஜெய் பீம் என பெயர் வைத்துள்ளனர். படத்தின்  பர்ஸ்ட் லுக்கில்&Read More

cinema Latest News News Tamil cinema

ஆர்ட்டிகிள் 15 ரீமேக் பர்ஸ்ட் லுக் தேதி ! வெளியான புதிய அப்டேட்

உதயநிதி நடிப்பில் உருவாகும் ஆர்ட்டிகிள் 15 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த் ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

சந்தானம் நடிக்கும் #AgentKannayiram ! – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !!

தெலுங்கில் இயக்குனர் ஸ்வரூப் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி தேசிய அளவில் ஹிட் அடித்த டிடெக்டிவ் படம் ஏஜ்ண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா. இந்த படத்தில் நவீன் பொலிசெட்டி, ஸ்ருதி சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் சமீபத்தில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் இந்த படம் தமிழில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் நிலையில் படத்திற்கு ஏஜெண்ட் கண்ணாயிரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (அக்டோபர் […]Read More

cinema Indian cinema Latest News News Uncategorized

‘#விக்ரம்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! வைரலாகும் போட்டோஸ் !!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விக்ரம்’. இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. சட்டமன்ற தேர்தல், கரோனா பரவல் எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின், நிலைமை சீரானதும் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவருகிறது. சமீபத்தில் விக்ரம் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்டதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்போது மூன்றாம்கட்ட படப்பிடிப்பை படக்குழு தொடங்கியுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

உண்மை சம்பவங்களின் தொகுப்பு … நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் #கவின்

’பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கவின் நடிப்பில் சமீபத்தில் ‘லிஃப்ட்’ வெளியாகி கவனம் ஈர்த்தது. ‘ஆகாஷ்வாணி’ என்ற வெப் சீரிஸிலும் நடித்து முடித்துள்ள கவின், அடுத்ததாக நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஊர்குருவி’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ வெற்றி படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடமும் விக்னேஷ் சிவனிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் இயக்குகிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் நடிக்கும் மற்ற […]Read More

cinema Indian cinema Latest News News

எதிர்பார்ப்பை எகிற வைத்த ’#அண்ணாத்த’ டீசர் இதோ !

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா […]Read More

cinema Indian cinema Latest News News

வைரலாகும் அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா நடிக்கும் #புஷ்பா திரைப்படத்தின் Second Single!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் ‘புஷ்பா’ படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் ஐந்து மொழிகளில் சற்று முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல், மற்றும்  மரம் கடத்தலை மையமாக வைத்தும்…  அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !