வைரலாகும் அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா நடிக்கும் #புஷ்பா திரைப்படத்தின் Second Single!

 வைரலாகும்  அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா நடிக்கும் #புஷ்பா திரைப்படத்தின் Second Single!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் ‘புஷ்பா’ படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் ஐந்து மொழிகளில் சற்று முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல், மற்றும்  மரம் கடத்தலை மையமாக வைத்தும்…  அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.  இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார். ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது.  மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் அக்டோபர் 13 இன்று, தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு மொழிகளில் சித் ஸ்ரீ ராம் குரலில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் ஸ்ரீவள்ளி பாடல் வெளியாகியுள்ளது. 

  • 95 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !