Latest News News Tamilnadu

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின்பு தியேட்டர்கள் இன்று முதல் திறப்பு !

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து (செப்டம்பர் 6-ம் தேதி வரை) தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, தியேட்டர்களில் நேற்று இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#ருத்ரதாண்டவம்’ டிரைலர்: திரெளபதி போல் பரபரப்பை ஏற்படுத்துமா?

இயக்குனர் மோகன் இயக்கியுள்ள ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5.06 மணிக்கு வெளியாக உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   மோகன்ஜி இயக்கியுள்ள திரவுபதி என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியான உடன் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு ஒரு பிரிவினர் வரவேற்பும் இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த படம் இந்த படம் எதிர்ப்பு காரணமாகவே வெற்றி பெற்றது என்றும் கூறலாம்.  இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

ட்விட்டர் தரவரிசையில் முதலிடம்! மாஸ்டரை பின்னுக்கு தள்ளிய #வலிமை …

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இந்த பட அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சில மாதங்கள் முன்னதாக எந்த வித அப்டேட்டும் வராமல் இருந்தது, இதனால் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு ஹேஷ்டேக் செய்வதை வேலையாக கொண்டிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வலிமை அப்டேட், பாடல்கள் ஆகியவை வெளியாகின. இந்நிலையில் ஜனவரி 1 முதல் ஜூன் 31 வரை அதிகளவில் பதிவிடப்பட்ட ஹேஷ்டேக் தரவரிசையை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவின் #Chiru153 படத்தின் மாஸ் அப்டேட் !

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளையொட்டி, நட்சத்திரத்தின் அடுத்த தயாரிப்பாளர்களான #Chiru153 அவர்களின் படத்திலிருந்து ஒரு ஆச்சரியத்தை வரிசைப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி (நாளை) மாலை 5:04 மணியளவில் ‘ #சிறு 153 இன் உச்ச வெளிப்பாடு’ என்று ஒரு போஸ்டரை வெளியிட்டனர். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது, இந்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். திரைப்பட புதுப்பிப்பு சிரஞ்சீவியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களையும், #சிறு 153 இன் விளம்பரங்களையும் தொடங்கும். ஒரு தீவிர அரசியல் நாடகம் என்று […]Read More

cinema Indian cinema Latest News News

ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா…வைரலாகும் வீடியோ!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், இன்றைய படப்பிடிப்புக்கு நயன்தாரா செல்லும் போது திடீரென ரசிகர்கள் கூட்டம், அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் ஏறி செல்ல முடியாமல் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி இருக்கிறார். இதையடுத்து நயன்தாராவின் பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். […]Read More

cinema Indian cinema Latest News News

வைரலாகும் விஷால் படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

‘அரிமா நம்பி’ படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து ‘எனிமி’ திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார். நடிகர் ஆர்யா வில்லனாக நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.  ஐதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்திய படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்தி மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தது. கடந்த மாத இறுதியில் வெளியான ‘எனிமி’ படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம்பெற்ற நிலையில், […]Read More

cinema Indian cinema Latest News News

சிவாங்கி குரலில் செம்ம வைரல் ஆகும் அஷ்வினின் ‘#அடிபொலி’ பாட்டு!

’குக் வித் கோமாளி’ மூலம் கவனம் ஈர்த்த அஸ்வின் தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேசமயம், சமீபத்தில் அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல் வெளியாகி மாபெரும் சூப்பர் ஹிட் அடித்து வைரலானது. இப்பாடல், இதுவரை யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளுக்கு மேல் கடந்துள்ளதோடு, ஒன்னரை மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளது. ஏற்கனவே, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பிரபலமடைந்திருந்தாலும் ’குட்டி பட்டாஸ்’ பாடல் மூலம் கவனம் ஈர்த்ததால் அஸ்வினுக்கு சினிமா வாய்ப்பும் வந்தது […]Read More

cinema Indian cinema Latest News News

ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட்! முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா?

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகை நல்லெண்ணெய் #சித்ரா காலமானார்!

பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு 12 மணிக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் காலமானார். அவருக்கு வயது (56). சித்ரா இயக்குநர் கே.பாலசந்தரால் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.  ரஜினியின் ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம் உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமாரின் ‘சேரன் பாண்டியன்’ படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக சித்ரா நடித்துள்ளார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமானதால் ‘நல்லெண்ணெய் சித்ரா’ என அழைக்கப்பட்டார். நடிகை சித்ரா கடைசியாக […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !