சிவாங்கி குரலில் செம்ம வைரல் ஆகும் அஷ்வினின் ‘#அடிபொலி’ பாட்டு!

 சிவாங்கி குரலில் செம்ம வைரல் ஆகும் அஷ்வினின் ‘#அடிபொலி’ பாட்டு!

’குக் வித் கோமாளி’ மூலம் கவனம் ஈர்த்த அஸ்வின் தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேசமயம், சமீபத்தில் அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல் வெளியாகி மாபெரும் சூப்பர் ஹிட் அடித்து வைரலானது.

இப்பாடல், இதுவரை யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளுக்கு மேல் கடந்துள்ளதோடு, ஒன்னரை மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளது. ஏற்கனவே, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பிரபலமடைந்திருந்தாலும் ’குட்டி பட்டாஸ்’ பாடல் மூலம் கவனம் ஈர்த்ததால் அஸ்வினுக்கு சினிமா வாய்ப்பும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அஸ்வினின் அடுத்த ஆல்பம் பாடலான ‘அடிபொலி’ பாடல் ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்பாடலை ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியும் வினீத் ஸ்ரீனிவாசனும் பாடியிருக்கிறார்கள் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், அஸ்வினுக்காக சிவாங்கி ’அடிபொலி’ பாடலை பாடியிருக்கிறார். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசையமைப்பாளர் சித்து குமார் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 • 7445 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !