cinema Latest News Tamil cinema

‘ஜகமே தந்திரம்’ அப்டேட் : தனுஷ் குரலில் இன்று வெளியான ‘நேத்து..’ பாடல்!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் […]Read More

cinema Indian cinema

பிஆர்ஓ மறைவு – திரையுலகினர் அதிர்ச்சி!

தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர்களான மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்பட பலருக்கும் பி.ஆர்.ஓவாக இருந்து வந்தவர் பி.ஏ.ராஜு. மேலும் விஷால் உள்பட ஒருசில தமிழ் நடிகர்களுக்கும் பி.ஆர்.ஓவாக இருந்து வந்தார். அதுமட்டுமின்றி சினிமா பத்திரிகையாளராகவும் திரைப்படங்களின் புரமோஷன்களையும் சிறப்பாக கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக பி.ஏ.ராஜு காலமானார். இவரது மறைவு செய்தியைக் கேட்டு முன்னணி நடிகர்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு, தேவிஸ்ரீபிரசாத், […]Read More

politics

ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், அதை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 10-ந்தேதி முதல் வரும் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். மருத்துவ நிபுணர் […]Read More

cinema Tamil cinema

சிவகார்த்திகேயன் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு புதிய வீடியோ மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை வரிசையாக பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒன்றே கொரோனாவை விரட்ட ஒரே வழி. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், மாஸ்க்களை முறையாக அணிய வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்’ […]Read More

Food Lifestyle

வித்தியாசமான சுவையில் கரும்பு பாயசம் !

முக்கிய பொருட்கள் 500 mililitre கரும்பு ஜீஸ் பிரதான உணவு 1/4 கப் அரிசி 2 தேக்கரண்டி நெய் 1 கைப்பிடியளவு முந்திரி 5 தேக்கரண்டி பால் Step 1:முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் நெய்யை விட்டு நெய் சூடானதும் முந்திரி சேர்த்து வறுக்கவும். முந்திரி பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். Step 2:முந்திரி பொன்னிறமானதும் அதை கடாயில் இருந்து தனியாக எடுத்து வைத்துவிட்டு கடாயில் தயாராக வைத்துள்ள கரும்பு சாறை ஊற்றவும். பிறகு கரும்பு […]Read More

Latest News News Tamilnadu

சென்னையில் காற்றுடன் மழை!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், எழும்பூர், சேப்பாக்கம், சென்ட்ரல், மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில், போரூர், செம்பரம்பாக்கம், பூவிருந்தமல்லி, காட்டுப்பாக்கம், திருவேற்காடு, மதுரவாயல் […]Read More

cinema Latest News Tamil cinema

நேரடியாக ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ !

இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படம் […]Read More

cinema Latest News Tamil cinema

தீவிர பாக்ஸிங் பயிற்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் […]Read More

Latest News politics

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 10 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடனும், பின்னர் எம்.எல்.ஏ.க்கள் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் […]Read More

cinema Indian cinema Latest News

பாலிவுட் படத்தில் நடிக்க மறுத்த ராஷ்மிகா மந்தனா!

கன்னட சினிமாவில் ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் அறிமுகமாகி தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, கார்த்தியுடன் சுல்தான் தமிழ்ப் படத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் தற்போதுதான் அறிமுகமாகிறார் என்றாலும் அவருக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம். நடிகை ராஷ்மிகா, தற்போது தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜூன் ஜோடியாக புஷ்பா படத்திலும், இந்தியில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக மிஷன் மஜ்னு படத்திலும், அமிதாப் பச்சனுடன் ஒரு இந்தி படத்திலும் நடித்து வரும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !