Tags : celebritie update

cinema Indian cinema Latest News News

பரத், வாணி போஜன் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

அக்சஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனத்தின் தயாரிப்பாளார் ஜி. டில்லிபாபு தயாரிப்பில் உருவாகிவரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிகர்கள் பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இதன் முழு படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்றதை தொடர்ந்து, இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், இதுகுறித்து தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு பேசும்போது… “எங்கள் நிறுவனத்தின் ‘Production No 12’ படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே […]Read More

cinema Latest News News Tamil cinema

காதலருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – வைரலாகும் போட்டோஸ்!

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி […]Read More

cinema Latest News News Tamil cinema

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகுபலி படம் மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்ததாக ‘ஆதிபுருஷ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். ராமாயணத்தின் ஒருபகுதியை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

‘மாநாடு’ அப்டேட் கொடுத்த சிம்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்துவரும் இப்படத்திற்கு, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. இப்படத்திற்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் விரைவில் […]Read More

cinema Gossip Latest News News

‘தளபதி 66’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது.  இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயன் – நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தின் ட்ரெய்லர் இதோ !

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகுமா? ஓடிடியில் ரிலீஸாகுமா எனக் கேள்வி எழுந்த நிலையில் படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.  அதில், வரும் அக்டோபர் 9 ஆம் தேதி இப்படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா உள்ளிட்ட பாடல்கள் […]Read More

cinema Latest News News Tamil cinema

புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த மீரா மிதுன் !வைரலாகும் புகைப்படங்கள் !!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மாடலிங் துறையில் இயங்கி வந்த இவர், சில நாட்களுக்கு முன்பாக தமிழ் திரைத் துறையில் இயக்குனர்கள் மற்றும் அவர்களின் சாதியை குறித்து அவதூறாக பேசிய சர்ச்சைக்குரிய கருத்து பெரிய அளவில் விவாதத்துக்கு உள்ளானது. இதனைத்தொடர்ந்து கேரளாவில் சுற்றுலாவில் இருந்த மீரா மீதுனை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்த வீடியோக்களும் புகைப்படங்களும் அந்த நேரத்தில் வைரலாகின. முன்னதாக மீரா மிதுன், போலீசார் […]Read More

cinema Latest News News Tamil cinema

யூடியூபில் சாதனை அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல்!

குக் வித் கோமாளி’ மூலம் கவனம் ஈர்த்த அஸ்வின் தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேசமயம், சமீபத்தில் அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல் வெளியாகி மாபெரும் சூப்பர் ஹிட் அடித்து வைரலானது. சின்னத்திரை நடிகர் நடிகர்களிலிருந்து டிக்டாக் பிரபலங்கள் வரை பலரும் இப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார்கள். ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் ‘குட்டி பட்டாஸ்’ இடம் பிடித்தது. அஸ்வின், ரெபா ஜான் நடிப்பில் சந்தோஷ் தயாநிதி இப்பாடலுக்கு இசையமைத்து பாடியிருந்தார். இப்போதும், […]Read More

cinema Gossip Latest News News

பிரபல இயக்குநரின் அடுத்தப்படத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்!

‘அடங்காதே’ திரைப்படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ’அடங்காதே’. இந்தப் படம் மூலம் சண்முகம் முத்துச்சாமி இயக்குனராக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதற்கு பிறகு விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இதைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தப் படத்திற்கான கதையை தயார் செய்து வரும் […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ … வைரலாகும் கௌதம் கார்த்திக் பட டீசர்!

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் தயாரிக்கிறார். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ புகழ் சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். ஷிவாத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !