Tags : celebritie News

Uncategorized

‘பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா

‘பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது என நடிகை தமன்னா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஒரு நேர்காணலில் அவர் கூறியிருப்பதாவது ” பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது. அவரை பொறுத்த வரை உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அளவில் முப்பதிற்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார். காந்தம் போன்ற மாயஜால வித்தையைக் காண்பது போலிருக்கும். இது அவர் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் ‘#தக்ஸ்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!!

பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவான ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குநர் பிருந்தாவின் இரண்டாவது திரைப்படமான ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படத்தின் முதல்பார்வையை சமீபத்தில் வெளியானது.. கன்யாகுமரி மாவட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ‘மும்பைக்கார்’ திரைப்படத்தில் நடித்த ரிது ஹரோன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நடிகர்கள்  விக்ரந்த் மாஸ்ஸே மற்றும் தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா, முனிஷ்காந்த், தயாரிப்பாளர் நடிகருமான ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர்.  இந்நிலையில்,  இப்படம் வருகிற பிப்.24 ஆம் […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய போஸ்டரை வெளியிட்ட ‘சொப்பன சுந்தரி’ படக்குழு

லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி வரும் சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது. டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று […]Read More

cinema Indian cinema Latest News News

வாரிசு’ OTT வெளியீட்டுத் தேதியை அறிவித்த பிரபல OTT நிறுவனம்!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆரம்பத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கினாலும் வசூலில் எந்தப் பாதிப்பும் ஆகவில்லை. குறிப்பாக, இப்படம் ரூ.250 கோடி வரை வசூலித்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற பிப்.22 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.Read More

cinema Indian cinema Latest News News

சல்மான்கானை சந்தித்த பிரபல நடன இயக்குனர்.. கவனம் ஈர்க்கும் புகைப்படம்..

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இந்தியில் பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வரவே துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து சல்மான் கானை தற்காத்து கொள்ள அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

’காந்தாரா’ வீட்டில் ஜெயிலர் படப்பிடிப்பு!!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு காந்தாரா படத்தில் இடம்பெற்ற வீட்டில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.  படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயன் நடிக்கும் #மாவீரன் பட கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!!

மாவீரன் திரைப்படத்தின் முதல் பார்வை கிளிம்ப்ஸ் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மண்டேலா திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் மாவீரன். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்தப் படம் வெளியாக உள்ளதால் இதில் சிவகார்த்திகேயன் மிகவும் கவனமாக நடித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

விருதுகளுக்கு தயாராகுங்கள்.. பிரபல இசையமைப்பாளரை வாழ்த்திய தமன்!!

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் ‘சார்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் நாளை (பிப்ரவரி 17-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பிரின்ஸ், வாரிசு உள்ளிட்ட பல படங்களின் இசையமைப்பாளரான தமன், வாத்தி படத்தின் பாடல்களுக்காக ஜிவிபிரகாஷ் குமாருக்கு […]Read More

cinema Indian cinema Latest News News

‘என்னை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்..’: பிரபல நடிகர் உருக்கம்!!

தன்னை துன்புறுத்துவதை தயவுசெய்து நிறுத்துங்கள் என பிரபல நடிகர் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார். ‘ஜோசப்’, ‘ஒன்’, ‘நயாட்டு,’ ‘ஜகமே தந்திரம்’ போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜோஜூ ஜார்ஜ் மலையாளத்தில் முக்கியமான நடிகர்.தற்போது, இவர் நடிப்பில் ‘இரட்டா’ என்கிற படம் வெளியாகியுள்ளது. இதில் இரட்டை வேடங்களில் ஜோஜூ நடித்துள்ளார்.  இந்நிலையில், அவர் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருந்தாலும் ’இரட்டா’ புரோமோஷனுக்காக மீண்டும் வந்தேன். ஆனால், சிலர் தொடர்ந்து என்மீது அவதூறுகளை சுமத்துகிறார்கள். என்னை […]Read More

cinema Indian cinema Latest News News

நான்காவது பாடலை வெளியிட்ட சமந்தா படக்குழு!!

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.qww இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் நான்காவது பாடலான ‘மயக்கும் பொழுதே’பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கபிலன் வரிகளில் சத்ய பிரகாஷ் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !