Tags : celebritie News

cinema Indian cinema Latest News News

பிரபல OTTயில் வெளியான விஜய்யின் #வாரிசு..

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் ஜனவரி 11ம் தேதி வெளிவந்த படம் ‘வாரிசு’. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டும் தியேட்டர்களில் வெளியானது. ஜனவரி 11 ஆம் தேதி தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து ஜனவரி 14 ஆம் தேதி தெலுங்கிலும் வெளியானது. உலகம் முழுவதும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம், […]Read More

cinema Indian cinema Latest News News

துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ வீடியோ பாடல் வெளியீடு!!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். துணிவு போனி கபூர் தயாரித்திருந்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், […]Read More

cinema Indian cinema Latest News News

பழனி கோவிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம்!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த மாதம் 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 29ம் தேதி தைப்பூச கொடியேற்றம் நடத்தப்பட்டு கடந்த 5ந் தேதி தேரோட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து பழனி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடிகைகள் அமலாபால், சமந்தா, நடிகர் கவுதம் கார்த்திக், அவரது மனைவி மஞ்சிமாமோகன் உள்பட ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் பிரபு மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

நடிகர் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் பிரபல திரைப்பட நடிகர் திரு பிரபு நேற்று (20 பிப் 2023) இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு இன்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன அவர் தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

’சிம்புவை இழுக்காதீர்கள்..’: ‘பத்து தல’ இயக்குநர் ட்வீட்!!

பத்து தல திரைப்படத்தின் புரோமோ விடியோ குறித்து இயக்குநர் கோரிக்கை வைத்துள்ளார்.கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய சாதனை படைத்த பதான்.. உற்சாகத்தில் படக்குழு!!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது. பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘பதான்’ படத்தின் வசூல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் […]Read More

cinema Indian cinema Latest News News

“இன்னும் உங்களை தேடிக்கொண்டிருக்கிறேன்” – ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் உருக்கமான பதிவு!!

இந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்றார். கலைத்துறையில் நடிகை ஸ்ரீதேவி ஆற்றிய பணிக்காக அவருக்கு 2013-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.. கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி உயிரிழந்தார். அவர் கடைசியாக நடித்த ‘மாம்’ திரைப்படத்திற்காக ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இவரது மகள் ஜான்வி கபூர், தற்போது பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய்யின் #லியோ படத்தில் இணைந்த லெஜண்ட் சரவணன்?வைரலாகும் வீடியோ !!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ'(Leo – Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் […]Read More

cinema Indian cinema Latest News News

அருண் விஜய்யின் ‘#பார்டர்’ வெளியீடு ஒத்திவைப்பு!!

அருண் விஜய் நடிப்பில் உருவான பார்டர் படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘பார்டர்’ திரைப்படம் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கிறது.தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிச் சென்றபடியே இருந்தது. இதற்கிடையே இப்படம் 2023, பிப்.24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.அருண் விஜய்யுடன் ரெஜினா காசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் தாரக ரத்னாவின் அகால மரணம் காரணமாக NBK108 படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,

நந்தமுரி பாலகிருஷ்ணா , த்ரிஷா கிருஷ்ணன், ஸ்ரீலீலா, காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஆர். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனில் ரவிபுடி இயக்கிய NBK 108 ஒரு அதிரடி பொழுதுபோக்கு திரைப்படம். இப்படத்தின் முதல் ஷெட்யூல் கடந்த ஆண்டு டிசம்பரில் முடிவடைந்தது. இத்தகவலை இயக்குனர் அனில் ரவிபுடி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கவிருந்த இரண்டாவது ஷெட்யூல் நடிகர் தாரக ரத்னாவின் மறைவு காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 39 வயதான அவர் பெங்களூரு மருத்துவமனையில் சனிக்கிழமை இறந்தார். நந்தமுரி ஓபுலேஸ்வர ராவ் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !