cinema Indian cinema Latest News News

#விடுதலை படத்தின் ‘காட்டு மல்லி’ பாடலின் விடியோ வெளியீடு!!

விடுதலை திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ வழி நெடுக காட்டு மல்லி’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இதில் இடம்பெற்ற இளையராஜா எழுதிப் பாடிய ‘வழி நெடுக காட்டுமல்லி’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.Read More

cinema Indian cinema Latest News News

ஹரிஷ் கல்யாண்-அட்டகத்தி தினேஷ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!!

கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால […]Read More

cinema Indian cinema Latest News News

40 வயதில் யூத் ஐகான் விருது.. நினைத்தும் பார்க்கவில்லை -தனுஷ் நெகிழ்ச்சி!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து ஹிட்டானது. தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படி பல […]Read More

cinema Indian cinema Latest News News

“குலசாமி” திரைப்படம் மே 5 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

MIK Productions தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் ‘குலசாமி’.“ சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் மூலம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. மேலே கூறப்பட்ட தேதியில் உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலை படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சாதகமாக இல்லை. எனவே, எங்களின் “குலசாமி” திரைப்படத்தின் வெளியீடு […]Read More

cinema Indian cinema Latest News News

டுவிட்டரில் புளூ டிக்கை இழந்த ரஜினி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள்!!

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய பயனாளர்கள் மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று டுவிட்டர் சி.இ.ஓ எலான் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி, தமிழில் அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 93 வயதாகும் பாத்திமா இஸ்மாயில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.Read More

cinema Indian cinema Latest News News

இளையராஜாவுடன் கைகோர்க்கும் பிரபல மலையாள இயக்குநர் !!

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்’, தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. ‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் […]Read More

cinema Indian cinema Latest News News

வாழ்க்கை சவால்களை அளிக்கும் போது அவள் என்ன செய்வாள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த

‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபர்ஹானா’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ‘ஃபர்ஹானா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து […]Read More

cinema Indian cinema Latest News News

சரியான கதைகள் நடிகர்களையும் தயாரிப்பாளர்களையும் அது தேர்ந்தெடுக்கும் – சமுத்திரகனி!!

அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அயோத்தி’. இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதையடுத்து அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் 50-வது நாள் விழாவில் […]Read More

cinema Indian cinema Latest News News

நானியின் ‘தசரா’ படத்தின் OTT ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு .. உற்சாகத்தில்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தசரா’. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வெளிநாடு பாக்ஸ் ஆபிசில் இரண்டு மில்லியன்களையும் இந்தியாவில் ரூ.110 கோடியையும் வசூல் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !