cinema Indian cinema Latest News News

சாய்பல்லவியின் ‘#கார்கி’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

சாய்பல்லவி நடிப்பில் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘கார்கி’. தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தை சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தமிழில் வெளியிட்டது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக சாய்பல்லவியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ‘கார்கி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற 12-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி […]Read More

cinema Indian cinema Latest News News

அதர்வா படத்தின் ரிலீஸ் அப்டேட்!! போஸ்டருடன் வெளியிட்ட உதயநிதி!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அதர்வா. ‘தள்ளி போகாதே’ படத்தை தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள ‘குருதி ஆட்டம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘ட்ரிக்கர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தன்யா ரவிசந்திரன் கதாநாயகியாக நடிக்க, அருண் பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதீக் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஸ்ருதி நல்லப்பா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் க்ளிம்பஸ் வீடியோ கடந்த […]Read More

cinema Latest News News Tamil cinema

வெளியானது ஆக்‌ஷன் நிறைத்த ‘#விருமன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர்!!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். தவிர, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை வட்டாரங்களில் நடைப்பெற்றது. ‘கொம்பன்’ படத்திற்கு பிறகு ஆறு […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன் – வெளிய சூப்பர் அப்டேட் !

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக கேங் லீடர் படம் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் களமிறங்கினார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இவர் நடனமாடிய செல்லம்மா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் போன்ற படங்களில் கலக்கினார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், […]Read More

cinema Indian cinema Latest News News

‘#கோப்ரா’ படத்தின் அப்டேட் கொடுத்த ARரஹ்மான்!

டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச விருது!

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவது முறையாக சமீபத்தில் வெளியான படம் ‘மாமனிதன்’. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரஜினிகாந்த். ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தை பாராட்டியிருந்தனர். இந்நிலையில் மாமனிதன் படத்திற்கு சர்வதேச விருது ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ திரைப்பட விருதுகள் 22 ல் சிறந்த ஆசிய திரைப்படத்திற்கான விருது […]Read More

cinema Indian cinema Latest News News

#PS1 ‘பொன்னியின் செல்வன் ‘படத்தின் புதிய போஸ்டர்! 

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் “பொன்னியின் செல்வன்” படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

அடுதடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம்

தமிழகத்தில் தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஆஹா ஓடிடி தளம், ரசிகர்களின் பேராதரவை பெற்று, முன்னணி ஓடிடி தளங்களுக்கு இணையாக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. சிறந்த கதைகள் கொண்ட தொடர்கள் மற்றும் வெற்றி திரைப்படங்களால் பார்வையாளர்களை அசத்தி வரும் ஆஹா, அடுத்ததாக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வார புதிய திரைப்படமாக, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற, நடிகை ஹன்ஷிகா மோத்வானி, சிம்பு நடித்த, “மஹா” படம் வெளியாகிறது. […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான அதிதி ஷங்கர்..! வெளியான சூப்பர் அப்டேட்!!

பிரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக மாவீரன் படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைய உள்ளார். இவர் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்திற்கு மாவீரன் என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த மாவீரன் படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

அருண்விஜய்யின் ‘#பார்டர்’ ரிலீஸ் தேதி !? வெளியான புதிய தகவல் !

பிரபல இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘பார்டர்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில் படத்தை வரும் 31ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் ‘பார்டர்’ திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் சிங்கிள் பாடல் ரிலீஸ் பணிகளையும் படக்குழுவினர் ஆரம்பித்து உள்ளதாகவும் அது குறித்த அறிவிப்புகளும் அடுத்தடுத்து […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !