பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன் – வெளிய சூப்பர் அப்டேட் !

 பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன் – வெளிய சூப்பர் அப்டேட் !

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக கேங் லீடர் படம் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் களமிறங்கினார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இவர் நடனமாடிய செல்லம்மா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் போன்ற படங்களில் கலக்கினார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய ராஜேஷ்.எம். அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, நட்டி என்கிற நடராஜன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜை இன்று(ஆகஸ்ட் 3) நடைபெற்றது. 

  • 32 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !