வெளியானது ஆக்‌ஷன் நிறைத்த ‘#விருமன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர்!!

 வெளியானது ஆக்‌ஷன் நிறைத்த  ‘#விருமன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர்!!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். தவிர, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை வட்டாரங்களில் நடைப்பெற்றது.

‘கொம்பன்’ படத்திற்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து ‘விருமன்’ படத்தின் மூலம் முத்தையா – கார்த்தி கூட்டணி இணைந்துள்ளனர் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, அண்மையில் வெளியான இந்தப் படத்தின் “காஞ்ச பூ கண்ணால…” பாடலின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் சங்கர் வெளியிட்டார்.

  • 3 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !