#PS1 ‘பொன்னியின் செல்வன் ‘படத்தின் புதிய போஸ்டர்! 

 #PS1 ‘பொன்னியின் செல்வன் ‘படத்தின் புதிய போஸ்டர்! 

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் “பொன்னியின் செல்வன்” படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்நிலையில் சமீபத்தில் வெளியான பொன்னி நதி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படத்தின் புதிய வந்தியத்தேவன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் கதை ஆடிப்பெருக்கு விழாவில் தான் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 32 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !