Tags : InandoutCinema update
இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘யசோதா’ படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி […]Read More
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பண்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது ‘ருத்ரன்’, ‘சந்திரமுகி 2’, ‘அதிகாரம்’, ‘துர்கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக லாரன்ஸ் தயாராகி வருகிறார். ராகவா லாரன்ஸ் தனது 46 பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து […]Read More
பீச்சாங்கை, என்னங்க சார் உங்க சட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆர்.எஸ்.கார்த்திக், தற்போது கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘போர்குடி’. இவருக்கு ஜோடியாக நடிகை ஆராத்யா நடித்திருக்கிறார். மேலும் சங்கர் தாஸ், அருண்மொழி தேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்ஷன் மற்றும் யாதவ் பிலிம் புரொடக்ஷன் எனும் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர்.தியாகு, ரோல்ஸ்டன் கருப்பசாமி, சரவணன் குப்புசாமி மற்றும் எஸ்.எஸ்.நந்தகுமார் ஆகியோர் இணைந்து […]Read More
அக்டோபர் 28, வெள்ளிக்கிழமை அன்று கோழிக்கோடு செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது, இது இப்போது காந்தார திருட்டு வழக்கில் முக்கிய திருப்புமுனையாக மாறியுள்ளது . சர்ச்சைக்குரிய ‘வராஹ ரூபம்’ பாடலை திரையரங்குகளில் இயக்குவதை நிறுத்துமாறு காந்தாரத்தின் தயாரிப்பாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல மலையாள இசைக் குழுவான டி ஹைக்குடம் பிரிட்ஜ் நிறுவனத்திடமிருந்து கருத்துத் திருட்டு வழக்கைப் பெற்றதை அடுத்து, கோழிக்கோடு செஷன்ஸ் நீதிமன்றம் ‘வராஹ ரூபம்’ பாடலை இசைக்க தயாரிப்பாளர்களுக்கு தடை விதித்தது . அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்தும் பாடல் தடைசெய்யப்பட்டுள்ளது. […]Read More
‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் இப்படத்தில் ஜெயிலர் ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ரஜினி நடிக்கும் அடுத்தடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லைகா […]Read More
கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘கொன்றால் பாவம்’. 1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையான இந்த திரைப்படம் மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோர் […]Read More
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் […]Read More
பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள அஜித்தின் துணிவு படத்தினை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் ‘துணிவு’. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் […]Read More
சுந்தர் சி இயக்கியுள்ள ‘காஃபி வித் காதல்’ படம் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, டிடி, சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைஸா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காஃபி வித் காதல்’. படத்திற்கு இசை – யுவன் சங்கர் ராஜா. இந்தப் படம் அக்டோபர் 7 அன்று வெளிவருவதாக இருந்த நிலையில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி […]Read More
தளபதி விஜய் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருமொழி திட்டத்தை வெளியிட தயாராகி வருகிறார்.வரிசு2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில். சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, வம்ஷி பைடிபலி இயக்கிய படம், பொங்கல் சிறப்பு வெளியீட்டாக ஜனவரி 2023 இல் திரையரங்குகளில் வர உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளபதி விஜய் மகிழ்ச்சியான பாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வரிசு தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது, இதன் மூலம் டோலிவுட்டில் விஜய்யின் முதல் நேரடி வெளியீடாக உருவாகிறது. சமீபத்தில் சினிமா […]Read More