cinema Indian cinema Latest News News

பலரது கவனம் பெற்ற ‘#யாத்திசை’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை’. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராகப் போராடிய ஒரு சிறு தொல்குடியைப் பற்றிய கதைதான் ‘யாத்திசை’. இப்படம் கடந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர். படத்தின் காட்சிகள் பிரமாண்டமாகவும் படத்தில் பேசிய பழங்கால தமிழ் மொழி எனப் பல்வேறு அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி […]Read More

cinema Indian cinema Latest News News

சூர்யா நடிக்கும் #கங்குவா படத்தைக் கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம்!

கங்குவா திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். ‘கங்குவா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Read More

cinema Indian cinema Latest News News

உடல் எடையை அதிகரித்த #சூர்யா.. வைரல் புகைப்படம்!

நடிகர் சூர்யாவின் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். ‘கங்குவா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் நடிகர் சூர்யா, ஜோதிகாவுடன் சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்படத்தில் சூர்யா தாடியுடன் உடல் […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அதிரடி அப்டேட் கொடுத்த படக்குழு!!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார்,எட்வர்ட் சொனின்ப்ளிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு […]Read More

cinema Indian cinema Latest News News

தென்னிந்திய அறிமுகப் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்த அர்ஜுன் ராம்பால் !!

இயக்குனர் அனில் ரவிபுடுவுடன் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படம், தற்காலிகமாக NBK108 என்று பெயரிடப்பட்டுள்ளது, இது டோலிவுட்டில் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். ஆரம்பம் முதலே பெரும் சலசலப்பைச் சுமந்து வரும் இப்படத்தில் நடிகர் சங்கம் பெரிய அளவில் இணைந்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் வரவேற்கப்பட்டுள்ளார். இது டோலிவுட்டில் அவரது அதிகாரப்பூர்வ அறிமுகத்தை குறிக்கும். தயாரிப்பாளர்கள் ட்விட்டருக்கு அழைத்துச் சென்று, செட்டில் சேரும்போது பாலகிருஷ்ணாவின் பிரபலமான உரையாடலை அர்ஜுன் ராம்பால் வாசிக்கும் […]Read More

cinema Indian cinema Latest News News

2 ஜாம்பவான்கள் பெயரை நிலைக்க வைக்க வரும் ‘இந்தியன் 2’ வெளியான சூப்பர்

இந்தியன் 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு இயக்குநர் ஷங்கர் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், […]Read More

cinema

தல சாஞ்சுருச்சே: இராவண கோட்டம் படத்தின் வைரலாகும் புதிய விடியோ!

பிரபல இயக்குநர் நடிகருமான பாக்யராஜின் மகன் ஷாந்தனு சக்கரகட்டி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சோனி இணையத் தொடரில் (ஸ்டோரி ஆஃப் திங்ஸ்) ஒன்றிலும் நடித்துள்ளார். தற்போது, கண்ணன் ரவி தயாரிப்பில் ‘இராவண கோட்டம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தினை ‘மதயானைக் கூட்டம்’ பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். கயல் ஆனந்தி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் டிரைலர் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆர்.ஜே.பாலாஜி படத்தில் சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தை ‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெய் நடிக்கும் ‘தீராக் காதல்’ படத்தின் டிரைலர் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’.இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘தீராக் காதல்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் […]Read More

cinema Indian cinema Latest News News

நயன்தாராவுடன் இணைந்த மீரா ஜாஸ்மின்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ‘டெஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. சமீபத்தில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !