cinema Indian cinema Latest News News

பள்ளி மாணவிகளுக்காக ZEE5 தளத்தின் “அயலி” இணையத்தொடர் சிறப்பு திரையிடல் !! அமைச்சர்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளி மாணவிகளுக்காக “அயலி” இணையத் தொடர் சிறப்பு திரையிடல் !! பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வலையில் ZEE5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. ZEE5 நிறுவனம் முன்னெடுத்த இவ்விழாவினில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ் அரசின் முதன்மைச் செயலாளர், […]Read More

cinema Indian cinema Latest News News

படப்பிடிப்பில் விறுவிறுப்பு காட்டும் ‘ஜிகர்தண்டா 2’ படக்குழு!!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]Read More

cinema Indian cinema Latest News News

டப்பிங் பணிகளை நிறைவு செய்த அருண் விஜய்!!வெளியான சூப்பர் அப்டேட்!!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘அச்சம் என்பது […]Read More

cinema Indian cinema Latest News News

‘நீ சிங்கம் தான்’ பாடலின் வீடியோ வெளியிட்ட #பத்துதல படக்குழு!!

ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.12 .3 கோடியை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இதையடுத்து ‘பத்து தல’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நீ சிங்கம் தான்’ பாடலின் வீடியோ இன்று மாலை 5.31 […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் தனுஷுடன் இணைந்த மாரி செல்வராஜ்!!வெளியான சூப்பர் அப்டேட்!!

2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

இந்த பாட்டுக்கு வைப் ஆகாத ஆளே இருக்க முடியாது.. புதிய உச்சத்தைத் தொட்ட

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது. அதிலும், தனுஷ் […]Read More

cinema Indian cinema Latest News News

”தந்தையின் உள்ளங்கை தொடும்போது சிங்கத்தின் பலம் சேரும்..” கவனம் ஈர்க்கும் ‘திருவின் குரல்’

இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் ‘திருவின் குரல்’. இப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து ‘திருவின் குரல்’ படத்தின் முதல் பாடலான ‘அப்பா என் அப்பா’ பாடலின் லிரிக் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

அந்த கருப்பு கண்ணாடி மாட்டிட்டு நிக்குறாரே..! வைரலாகும் ஹிப்ஹாப் ஆதியின் பதிவு!!

மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் படம் ‘வீரன்’. ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி சமூக வலைத்தளத்தில் இயக்குனர் […]Read More

cinema Indian cinema Latest News News

”வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை.. ” ரஜினிகாந்த் பாராட்டு!வைரலாகும் ட்வீட்!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை-1’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘விடுதலை’ திரைப்படத்தை பாராட்டி […]Read More

cinema Indian cinema Latest News News

திரையுலக முன்னணி பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ பட முன்னோட்டம்!

திரையுலக முன்னணி பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ பட முன்னோட்டம் நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர்கள் சூரி மற்றும் ஆதி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர். இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !