cinema Indian cinema Latest News News

விரைவில் வெளியாகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’.. வைரலாகும் போஸ்டர்..

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வேலைகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

இளையராஜா இசையில் பாடிய தனுஷ்…வைரலாகும் ப்ரோமோ வீடியோ!!

காமெடி நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‛விடுதலை’. வெற்றிமாறன் இயக்கி உள்ளார். சிறப்பு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க, முக்கிய வேடத்தில் கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் விடுதலை படத்திலிருந்து முதல்பாடலாக ‘ஒன்னோட நடந்தா’ என்ற பாடலை பிப்., 8ம் தேதி வெளியிடுகின்றனர். இதை நடிகர் தனுஷ் பாடி […]Read More

cinema Indian cinema Latest News News

‘கீதா கோவிந்தம்’ பட இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா!!

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் ‘குஷி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா ‘கீதா கோவிந்தம்’ பட இயக்குனருடன் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் தள்ளிப்போகும் ‘சாகுந்தலம்’ திரைப்படம் .. ஏமாற்றத்தில் ரசிகர்கள்..

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், ‘சாகுந்தலம்’ திரைப்படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக […]Read More

cinema Indian cinema Latest News News

இணையத்தை கலக்க வரும் ‘வாத்தி’ டிரைலர்.. எப்போது தெரியுமா.?

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.’வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

Grammy 2023: மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார் இந்தியாவின் ரிக்கி கெஜ்..!

பிரபலமான இசை விருதுகளில் ஒன்றான 65வது ஆண்டு கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிரிப்டோ.காம் அரங்கில் இன்று நடைபெற்றது.ட்ரெவர் நோவா விழாவின் தொகுப்பாளராக திரும்பினார். டெய்லர் ஸ்விஃப்ட், பியான்ஸ் போன்ற பல பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்அதில் கர்நாடகாவைச் சேர்ந்த ரிக்கி கெஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். சிறந்த இம்மர்சிவ் ஆடியோ ஆல்பம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட இவரது ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பம் விருதை பெற்றது. இந்த விருதை ராக் இசை […]Read More

cinema Indian cinema Latest News News

படப்பிடிப்பிற்காக தைவான் செல்லும் இந்தியன் -2 படக்குழு?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

‘#ஜெயிலர்’ படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராஃப்!!!

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளார். ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.  படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

“அலங்கார அல்லி நிலா ஆட போட்டு நின்னாளே..” வைரலாகும் ‘ரஞ்சிதமே’ வீடியோ பாடல்..

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாரிசு பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘வாரிசு’ படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

முதல்முறையாக இளையராஜா இசையில் தனுஷ்.. அப்டேட் கொடுத்த ‘#விடுதலை’ படக்குழு..

வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா’ பாடல் வருகிற […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !