cinema Indian cinema Latest News News

தெறிக்கும் இசை – ஆக்‌ஷன் காட்சிகளுடன் சரவணா ஸ்டோர்ஸ் சரவணின் `தி லெஜண்ட்’

‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் முதல் பார்வைக்கான போஸ்டர் வெளியாகியுள்ளது. அதனுடன் படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர். தனது கடை தொடர்பான விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், தற்போது ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக, பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். கோலிவுட்டின் ட்ரெண்டிங் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘முசாஃபிர்’ மியூசிக் ஆல்பம் வெளியீடு தேதி அறிவிப்பு!

‘3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார். இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பிற்கு ஐதராபாத்திற்கு சென்றபோது, கொரோனா தொற்றால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்தார். இதனால் சில நாட்கள் மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ‘முசாஃபிர்’ என்ற டைட்டில் கொண்ட இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த மியூசிக் ஆல்பத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதியை கௌரவித்த அமீரகம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய  கோல்டன் விசாவை வழங்குகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், துல்கர் சல்மான், மம்முட்டி,அமலா பால் உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகை த்ரிஷா, மற்றும் நடிகர் பார்த்திபன் ஆகியோருக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு கோல்டன் […]Read More

cinema Indian cinema Latest News News

கடுக்கன், தாடி… வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். வரும் மார்ச் 9-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட அரங்கை கடந்த ஒரு மாதமாக ’அஜித் 61’ படக்குழுவினர் அமைத்து வருகிறார்கள். வரும் தீபாவளிக்கு ’அஜித் 61’ படத்தினை திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். நாயகியாக தபுவும், ‘பிக்பாஸ்’ கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அஜித் ‘அஜித் […]Read More

cinema Indian cinema Latest News News

இந்தவாரம் வெளியாகும் திரைப்படங்கள்: ஹே சினாமிகா முதல் ’ஜுண்ட்’ வரை ஒரு பார்வை

‘ஹே சினாமிகா’ துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ வரும் மார்ச் 3 ஆம் தேதி (நாளை) தியேட்டர்களில் வெளியாகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றிக்குப்பிறகு துல்கர் நடிக்கும் தமிழ் படம் என்பதால் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது ‘ஹே சினாமிகா’. ’ஜூண்ட்’ இந்தியாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !