Tags : inandout cinema

cinema Indian cinema

யுவன் இசையில் , சித் ஸ்ரீராம் குரலில் கார்த்தியின் ‘#விருமன்’ சிங்கிள் லிரிக்

நடிகர் கார்த்தி திரைவாழ்வில் கிராமத்து இளைஞர் வேடத்தில் அவர் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘பருத்திவீரன்’ , ‘கொம்பன்’ மற்றும் ‘கடைகுட்டி சிங்கம்’ போன்ற படங்கள் அமைந்தன. இதையடுத்து கொம்பன் திரைபடத்துக்குப் பிறகு மீண்டும் கார்த்தி – முத்தையா கூட்டணி விருமன் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்துக்காக இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா […]Read More

cinema Indian cinema Latest News News

பிறந்தநாளில் சிறப்பு தரிசனம் செய்த கார்த்தி! வைரலாகும் ஃபோட்டோ!!

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் அரசியல் கட்சியினர், திரை நட்சத்திரங்கள் என ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். அதன் வரிசையில் கார்த்தியின் பிறந்தநாளான இன்று பழனி மலைக்கோவிலில் அவருடைய தந்தை சிவக்குமாருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். வின்ச் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று விஸ்வரூப தரிசனத்திற்கு பின் வழிபாடு […]Read More

cinema Indian cinema Latest News

இயக்குநர் சஞ்சய் நாராயணனின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன்- கே.எஸ் ரவிக்குமார் !!

21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் […]Read More

cinema Indian cinema Latest News News

தீபாவளிக்கு வெளியாகும் கார்த்தி நடிக்கும்’சர்தார்’!! வெளியான சூப்பர் அப்டேட்!!

முத்தையா இயக்கும் ’விருமன்’, பி.எஸ் மித்ரன் இயக்கும் ’சர்தார்’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ளன. இதில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி ‘விருமன்’ தியேட்டர்களில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதேபோல, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகமும் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது என்று ஏற்கனவே அறிவித்தது படக்குழு. இந்த நிலையில், கார்த்தி இரண்டு கெட்டப்புகளில் நடிக்கும் ‘சர்தார்’ படத்தின் ரிலீஸ் தேதியை கார்த்தியின் பிறந்தநாளையொட்டி […]Read More

cinema Indian cinema Latest News News

பிறந்தநாளில் வெளியாகும் தனுஷின்‘#திருச்சிற்றம்பலம்’!! வெளியான சூப்பர் அப்டேட்!!

தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘மாறன்’ வெளியானது. இதனைத்தொடர்ந்து மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’, ‘தி க்ரே மேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் தனுஷ், ராம்குமாரின் ‘வால் நட்சத்திரம்’, மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதில், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தினை அடுத்ததாக திரைக்கு வெளிக்கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில், தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். […]Read More

cinema Indian cinema Latest News News

தந்தை டி ராஜேந்தரின் உடல்நிலை குறித்து சிலம்பரசன் TR வெளியிட்ட அறிக்கை!!

கோலிவுட்டின் நடிகரும் இயக்குனருமான சிலம்பர்சன் டி.ஆரின் தந்தை டி.ராஜேந்தர் , மே 7-ம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று, சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார், அவர் நலமாகவும், சுயநினைவுடன் இருப்பதாகவும் கூறினார். அந்த செய்திக்குறிப்பில், “அன்புள்ள பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களே, எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம்.மருத்துவ பரிசோதனையில் […]Read More

cinema Indian cinema Latest News News

மிரட்டலாக வெளியான தனுஷின் ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் – அதிரவிடும் ரசிகர்கள்!!

நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’, ‘கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’ போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் ஹாலிவுட் படம்‘தி கிரே மேன்’. இந்தப் படத்தில் ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் தமிழ் […]Read More

cinema Indian cinema Latest News News

போயஸ்கார்டன் to ஸ்டூடியோ; ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்!

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க, ‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார். ‘‘அப்படியா..நானும் அங்கே வருகிறேன்’’ என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார். ஸ்டூடியோவில் […]Read More

cinema Indian cinema Latest News News

கமல்ஹாசன் படங்களிலேயே அதிக வியாபாரம் செய்த ‘#விக்ரம்’!! எவ்ளோ கோடி தெரியுமா ??

கமல்ஹாசன் நடித்துள்ள ’விக்ரம்’ படம் ரூ. 172 கோடியே 50 லட்சத்திற்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ’விக்ரம்’. இதில், அவருடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேபோல், நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வருகிறார். ஆக்‌ஷன் பார்முலாவில் எடுக்கப்பட்டிருக்கும் ’விக்ரம்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் படத்தின் பட்ஜெட் அதிகமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது . பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான ’கும்கி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ’அரிமா நம்பி’ ’சிகரம் தொடு’ ’வெள்ளைக்கார துரை’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் விக்ரம் பிரபு. இவரது நடிப்பில் உருவான ’டாணக்காரன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !