யுவன் இசையில் , சித் ஸ்ரீராம் குரலில் கார்த்தியின் ‘#விருமன்’ சிங்கிள் லிரிக் வீடியோ!

நடிகர் கார்த்தி திரைவாழ்வில் கிராமத்து இளைஞர் வேடத்தில் அவர் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘பருத்திவீரன்’ , ‘கொம்பன்’ மற்றும் ‘கடைகுட்டி சிங்கம்’ போன்ற படங்கள் அமைந்தன. இதையடுத்து கொம்பன் திரைபடத்துக்குப் பிறகு மீண்டும் கார்த்தி – முத்தையா கூட்டணி விருமன் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்துக்காக இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார்.
இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.
இயக்கம் – முத்தையா. இசை – யுவன் சங்கர் ராஜா.ஆகஸ்ட் 31-ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று விருமன் படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூவு கண்ணால பாடல், இன்று வெளியிடப்பட்டுள்ளது. சித்ஸ்ரீராம் இப்பாடலைப் பாடியுள்ளார்.