Tags : celebritie News

cinema Indian cinema Latest News News

‘துருவ நட்சத்திரம்’ வெளியிட்ட புதிய போஸ்டர்!!

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்ngaகளில் நடித்துள்ளனர். துருவ நட்சத்திரம் இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது.1 வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று […]Read More

cinema Indian cinema

புரொமோஷனால் ப்ளூ டிக்கை இழந்த சோழர்கள்.. அதிரடி காட்டிய எலான் மஸ்க்!!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. […]Read More

cinema Indian cinema Latest News News

கவனம் ஈர்க்கும் முத்தையா முரளிதரன் பயோபிக் போஸ்டர்!!

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘கனிமொழி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எம்.எஸ்.ஸ்ரீபதி. இவர் தற்போது கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான ‘800’ படத்தை இயக்கி வருகிறார். மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். மேலும், மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், […]Read More

cinema Indian cinema Latest News News

கிராமிய பின்னணியிலான முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரம் ‘தெய்வ மச்சான்’-பத்திரிக்கையாளர்

உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் ‘ஆடுகளம்’ நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய விதிகளுடன் வரும் ‘சூது கவ்வும் -2’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கடந்த 2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ‘சூது கவ்வும்’. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘சூது கவ்வும் 2’ படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் ‘மிர்ச்சி’ சிவா […]Read More

cinema Indian cinema Latest News News

விக்ரம் பிறந்த நாள் பரிசு.. வைரலாகும் ‘#தங்கலான்’ மேக்கிங் வீடியோ!!

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து படப்பிடிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

பேயாக மிரட்டும் யாஷிகா ஆனந்த்.. கவனம் ஈர்க்கும் ‘சைத்ரா’ டிரைலர்!!

பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஜெனித்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைத்ரா’. மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கும் இப்படத்திற்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 24 மணிநேரத்தில் நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘அவள் பெயர் ரஜ்னி’ டீசர்!!

இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அவள் பெயர் ரஜ்னி’. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நவரசா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 4 மியூசிக்ஸ் இசையமைக்கின்றனர். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் […]Read More

cinema Indian cinema Latest News News

கலாபூர்வமான ஒரு நன்மை ‘விடுதலை’ படத்தில் இருக்கிறது -சீனுராமசாமி!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை-1’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘விடுதலை’ திரைப்படத்தை பார்த்த இயக்குனர் சீனுராமசாமி படக்குழுவை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ஒரு திரைப்படம் கவனம் பெறுவதில் வணிகம் தாண்டி கலாபூர்வமான ஒரு நன்மை இருக்கிறது. அந்த […]Read More

cinema Indian cinema Latest News News

இத்தனை வகை உணவா..!? மாதவனுக்கு சுதா கொங்கரா தந்த சூப்பர் உணவு !!

2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தை இயக்கியதன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றார். தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது. இவருக்கு சமீபத்தில் கையில் காயம் ஏற்பட்டு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !