Latest News News politics

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? – ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் !

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. இதனால் தமிழகத்தில் கடந்த கடந்த மே 10 அன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. எனினும் கொரோனா தாக்கம் குறையாத நிலையில் கடந்த மே 31 ல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முதல்வர் […]Read More

cinema Latest News News Tamil cinema

பழைய நாட்களுக்கு திரும்பிய நடிகை !ஹேர்ஸ்டைலிஸ்ட்டை டேக் செய்து போஸ்ட்!

கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு பெரும்பாலும் நிறுத்தப்பட்டிருக்கும் நேரத்தில், நடிகை ரகுல் பிரீத் சிங் வியாழக்கிழமை சமூக ஊடகங்களுக்கு அழைத்துச் சென்றார். இன்ஸ்டாகிராமில் ஒரு த்ரோபேக் புகைப்படத்தை ரகுல் பகிர்ந்துள்ளார், அங்கு அவர் தனது அழகான தலைமுடியை முகத்தில் புன்னகையுடன் வெளிப்படுத்துகிறார். “செட்டில் திரும்பி நல்ல முடி தினத்தை அனுபவிக்க காத்திருக்க முடியாது, தினமும் சாதாரண நேரத்திற்கு திரும்புதல்” என்று நடிகை தனது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஹேர்ஸ்டைலிஸ்ட்டை டேக் செய்து இன்ஸ்டாகிராமில் […]Read More

Food Lifestyle

‘ஏலக்காய் டீ’ அடிக்கடி குடிப்பதால் இவ்ளோ நன்மைகளா?

அனைத்து சமையலிலும் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது, இது உணவு பொருளுக்கு சுவையையும், மணத்தையும் தரக் கூடியது. இது உணவு பொருள்களில் மட்டுமில்லாமல் தேநீர் தயாரிக்கவும் பயன்படுகிறது. ஏலக்காயில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ, பி, சி, போன்றவை அதிக அளவில் உள்ளன. ஏலக்காய் டீயை அடிக்கடி குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம். ஏலக்காயில் பாலிஃபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. […]Read More

cinema Latest News News Tamil cinema Uncategorized

முருக பக்தராக நடிக்கும் விஜய் சேதுபதி…

காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் முழுவதுமாக தயாராகி விட்டாலும் சில ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா லாக்டவுனும் சேர்ந்துகொண்டதால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய […]Read More

cinema Latest News Tamil cinema Tamilnadu

அறிவழகன் இயக்கத்தில் ரெஜினா… புதிய கூட்டணி!

ஈரம் மற்றும் குற்ற்ம் 23 ஆகிய படங்களின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இதையடுத்து இவரை அழைத்த நயன்தாரா தனக்காக ஒரு கதை கேட்டார். நீண்டகாலமாக இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்துக்காக செலவிட்டார் இயக்குனர். ஆனால் படம் கைகூடவில்லை. இடையில் அருண் விஜய்யை வைத்து பார்டர் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் பார்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கே தனது அடுத்த படத்தையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் மையக் கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்க உள்ளார்.Read More

cinema Tamil cinema

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் சில திரைப்பாடல்களை பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் குக் வித் கோமாளி ஷிவாங்கி சற்று முன்னர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு […]Read More

cinema Gossip Indian cinema Latest News Tamil cinema

மகேஷ் பாபுவிற்கு வில்லன் இவரா? ரசிகர்கள் ஆச்சர்யம்

தெலுங்கு சினிமா உலகின் முன்னனி நடிகர்களுள் முக்கியமானவர் மகேஷ் பாபு. அவரது ரசிகர்கள் அவரது திரைப்படம் ரிலீஸ் ஆவதை திருவிழாவாக கொண்டாடுவார்கள். கொரனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையிலும் எப்பொழுது பெரிய ஹீரோக்களின் படங்களை தியேட்டர்களில் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு வில்லனாக தமிழ் சினிமாவின் ஹீரோ ஒருவர் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இயக்குநர் பர்சுராம் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் சர்காரு வாரி பாட்டா […]Read More

cinema Latest News News Tamil cinema Uncategorized

மாநாடு சிங்கிள் மாஸ் அப்டேட் ? யுவன்ஷஙகர் ராஜா டுவிட்!

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கு காரணமாக மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருப்பதால் இந்த நேரத்தில் சிங்கிள் பாடலை வெளியிட விரும்பவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதனால் இந்த பாடல் எப்போது வெளிவரும் என்று தெரியாமல் சிம்பு ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். […]Read More

Latest News News Tamilnadu

கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்-மளிகை பொருட்கள் தொகுப்பு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி இருந்தார்.அதில் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும்.அதன்படி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக மே 7-ந்தேதி பதவி ஏற்றதும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டார்.அதன்படி கடந்த மாதம் ரே‌ஷன் கடைகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !