cinema Indian cinema Latest News News

பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலையில் முன்னேற்றம்.. குடும்பத்தார் தகவல்

புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர். தமிழில் இவர் பாடிய ‘வசீகரா’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘யாரோ மனதிலே’ உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். பாம்பே ஜெயஸ்ரீ லண்டனிற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு […]Read More

cinema Indian cinema Latest News News

“அரியணைக்காக மீண்டும் சண்டையிடும் சோழர்கள்.. ” டிரைலர் அறிவிப்பை வெளியிட்ட பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி!!

புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர். தமிழில் இவர் பாடிய ‘வசீகரா’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘யாரோ மனதிலே’ உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#பகாசூரன்’ இயக்குநரின் அடுத்த படம் குறித்த அப்டேட்!

திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய பிரபலமானவர் மோகன்.ஜி. அடுத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கினார். அதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். இந்தப்படம் பிப்.17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.கலவையான விமர்சனங்களை பெற்றாலும் செல்வராகவனின் நடிப்பை திரைப் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படம் நாளை […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் அஜித்குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் விஜய்!சொன்ன விஜய்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.Read More

cinema Indian cinema Latest News News

முதன்முறையாக தேசிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்!!

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது. இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தேசிய பங்கு சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவரான கௌரி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு […]Read More

cinema Indian cinema Latest News News

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் – ஐஷ்வர்யா ராஜேஷ் – ஷிவதா இணையும்

‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து […]Read More

cinema Indian cinema Latest News News

அஜித்தின் தந்தை மறைவு- எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை 3:15 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், தந்தையை இழந்து […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய வெளியீட்டு தேதியை அறிவித்த குஷி படக்குழு!!

சமந்தா ரூத் பிரபு மற்றும் விஜய் தேவரகொண்டாவின் காதல் படமான குஷி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். இறுதியாக, ஒரு அழகான புதிய போஸ்டருடன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குஷி செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது மற்றும் இதயத்தைத் தூண்டும் காதல் கதைக்கு உறுதியளிக்கிறது. புதிய போஸ்டரில் சமந்தாவும் விஜய்யும் வெவ்வேறு பின்னணியில் இருந்து கைகோர்த்து இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இரண்டு உலகங்களும் செப்டம்பர் 1, 2023 அன்று சந்திக்கும்” என்று சமந்தா ட்விட்டரில் போஸ்டரைப் […]Read More

cinema Indian cinema Latest News News

ஜூனியர் என்டிஆர் படத்தை கிளாப் போர்ட் அடித்து துவங்கி வைத்த இயக்குனர் ராஜமவுலி!!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கொரடலா சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குனர் ராஜமவுலி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !