cinema Indian cinema Latest News News

‘ஆகஸ்ட் 16, 1947’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!!

கௌதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16, 1947 படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சௌத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆகஸ்ட் 16, 1947. என்.எஸ்.பொன்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, விஜய் டிவி புகழ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இந்தக் கதை நடக்கிறது. சான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர் கடந்து […]Read More

cinema Indian cinema Latest News News

’#விடுதலை’ டிரைலர் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விடுதலை முதல் பாகத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர். இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் […]Read More

cinema Indian cinema Latest News News

7 மாதங்களுக்கு பின் நான்கு மொழிகளில் பிரபல OTTயில் வெளியான ‘தி லெஜெண்ட்’!!

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி – ஜெரி இயக்கியிருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ. 45 கோடி வசூல் செய்தது.   தி லெஜண்ட் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்ற இரு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படும் நிலையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று மதியம் 12.30 […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’ திரைப்பட டிரைலர் வெளியீடு!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சொப்பன சுந்தரி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ’லாக்கப்’ படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் சொப்பன சுந்தரி. இதில் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டார்க் காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்திலிருந்து […]Read More

cinema Indian cinema Latest News News

சந்தீப் கிஷனின் மைக்கல் படத்திற்கு தடை!!

தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான சந்தீப் கிஷன் நடிப்பில் மைக்கேல் படம் தயாராகி கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதில் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்தார். புதிய படங்களை திரையரங்குகளில் வெளியான பிறகு 4 வாரங்கள் கழித்தே ஓ.டி.டி. தளங்களில் வெளியிட வேண்டும் என்று திரையரங்க அதிபர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்து உள்ளது. ஆனால் மைக்கேல் படத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்பு நடிக்கும் ’பத்து தல’ டீசர் அறிவிப்பு!

பத்து தல திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.  சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு […]Read More

cinema Indian cinema Latest News News

‘மாமன்னன்’ டப்பிங் பணிகளில் வடிவேலு!!இணையதளத்தில் வைரலாகும் போட்டோ !

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ என்கிற புதிய படத்தை இயக்கிவந்தார்.படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முழுமையாக நிறைவு பெற்றது.இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன. முதல்கட்டமாக நடிகர் வடிவேலு டப்பிங் பேசி வரும் புகைப்படத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்புவுடன் இணையும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர்!?

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுடன் இணைந்து கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக […]Read More

cinema Indian cinema Latest News News

உலகத்துல எல்லாமே ரெண்டு! ட்ரெண்டிங்கில் சமுத்திரக்கனி பட டீசர்!!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் ‘ராஜாகிளி’. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இதில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தம்பி ராமையா இசையமைத்துள்ளார். கோபிநாத், கேதார்நாத் இருவரும் […]Read More

cinema Indian cinema Latest News News

கமல்ஹாசனை சந்தித்த பாரதிராஜா.. இணையதளத்தில் வைரலாகும் போட்டோ!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !