cinema Indian cinema Latest News News

கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது.. தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் செய்த செயல்..

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

அக்‌ஷய் குமாரின் ‘சத்ரபதி சிவாஜி’ புதிய போஸ்டர் வெளியானது!

பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் மீண்டும் ஒரு சரித்திர படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. -ADVERTISEMENT-Ads by 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரித்விராஜ் சவுகான் என்ற மன்னனை பற்றிய வரலாற்று படத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருந்தார். தற்போது மீண்டும் சரித்திரப் படமொன்றில் நடிக்க உள்ளார். மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முதன் முறையாக மராத்தி படத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. வசீம் குரேஷி தயாரிப்பில் மகேஷ் மஞ்சுரேகர் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படம் சிவாஜியின் […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷ் படப்பிடிப்பில் இணைந்த கன்னடா சூப்பர் ஸ்டார்!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.  சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார்.  மேலும், தென்காசியில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் தனுஷூடன் கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷிவ ராஜ்குமார் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தனுஷின் அண்ணனாக ஷிவ் ராஜ்குமார் நடிக்க உள்ளார் […]Read More

cinema Indian cinema Latest News News

’யசோதா’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!!

சமந்தாவின் நடிப்பில் வெளியான யசோதா’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரி – ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. படம் நல்ல வரவேற்பினை பெற்றதால் உலகம் முழுவதும்  ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.இந்நிலையில், இப்படம் வருகிற டிச.9 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. Read More

cinema Indian cinema Latest News News Uncategorized

ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன்!!!

‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ மற்றும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது. இணைய தலைமுறையினரின் கையடக்க கணினி முதல் அவர்கள் பணியாற்றும் மடிக்கணினி வரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிக்கும் நடிகையான ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார். மில்லியன் கணக்கிலான மக்களை […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் ஆண்டனியின் ‘#ரத்தம்’ படத்தின் டீசர் !

தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடிக்க உள்ளனர்.  இசை- கண்ணன் நாராயணன். ஒளிப்பதிவு- கோபி அமர்நாத். சண்டைப் பயிற்சி- திலீப் சுப்பராயன்.  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ‘ரத்தம்’ பட டீசரில் முன்னணி இயக்குநர்கள் சிறப்புத் தோற்றத்தில் இடம் பெற்றுள்ளனர். […]Read More

cinema Indian cinema Latest News News

ஒழுக்கத்தை விட்டோம்.. கவனம் ஈர்க்கும் பகாசூரன் பட டிரைலர்..

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள ‘பகாசூரன்’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். ‘பகாசூரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

பரத்தின் 50வது படத்தில் வாணி போஜன்: டீசர் எப்போது?

நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான மிரள் படம் சமீபத்தில் வெளியானது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான பரத் தற்போது 50வது படமாக ‘லவ்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது படத்தின் டீசர் நாளை மலை 6.50க்கு வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்ற லவ் படத்தின் தமிழ் ரீமிக்கை தயாரித்து இயக்கியுள்ளார் […]Read More

cinema Indian cinema Latest News News

பூஜையுடன் தொடங்கிய தளபதி லோகேஷ் படம்!!

விஜய்யின் 67 படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றுள்ளது.நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் புதிய திரைப்படத்தில் நடிப்பார் என ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இந்தத் தகவல் உறுதியாகியுள்ளது. லலித் கூட்டணி தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 67 படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் […]Read More

cinema Indian cinema Latest News News

எக்ஸ்க்ளூசிவ்: அஜித் குமார் நடித்த துணிவு படத்தின் பிரஸ்ட் சிங்கள் அப்டேட்!!

அஜீத் குமார் நடிக்கும் படம்துனிவுஎச்.வினோத் இயக்கிய இப்படம் 2023 பொங்கல் பண்டிகையின் போது திரைக்கு வர உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்டு படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’வை வெளியிட தயாராகி வருகின்றனர். பிங்க்வில்லா பிரத்தியேகமாக கற்றுக்கொண்டது, ஜிப்ரான் இசையில் அனிருத் பாடிய முதல் பாடல் சில்லா சில்லா டிசம்பர் 9 அன்று வெளியாகும். “அஜித் முதல் பாடலில் ஒரு பெரிய அவதாரத்தில் காணப்படுவார், ஒரு வேகமான நடனம். இதில் அஜித்துடன் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !