cinema Indian cinema Latest News News

வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் “சியான் 61” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். இவர் அவருடன் பணியாற்றும் சகஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். […]Read More

cinema Indian cinema Latest News News

#SSMB28: மகேஷ் பாபு மற்றும் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் படத்தின் படப்பிடிப்பு; வெளியான சூப்பர்

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு தனது வரவிருக்கும் படமான எஸ்எஸ்எம்பி 28 க்காக மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஒரு தசாப்தத்திற்குப் பிறகு நடிகரும் இயக்குனரும் இணைந்திருப்பதால் டோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்றாகும், மேலும் எதிர்பார்ப்புகள் விண்ணை முட்டும். லேட்டஸ்ட் அப்டேட் படி, ரெகுலர் ஷூட் இன்று தொடங்க இருக்கிறது. மகேஷ் பாபுவின் லுக் டெஸ்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இப்படத்தின் முதல் ஷெட்யூல் இன்று தொடங்குகிறது. படப்பிடிப்புக்காக ராமோஜி பிலிம் சிட்டியில் பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபு […]Read More

cinema Indian cinema Latest News News

அபர்ணா பாலமுரளியின் பிறந்தநாளில் வெளியான புதிய போஸ்டர்!

2013-இல் மலையாளத்தில் அறிமுகமான அபர்ணா தமிழில் 2016-இல் ‘8 தோட்டாக்கள்’ மூலம் காலடி எடுத்து வைத்தார். 2019இல் வெளிவந்த ‘சர்வம் தாள மயம்’ தமிழில் அபர்ணாவின் இரண்டாவது படம். இரண்டு தமிழ் படங்களில், பத்திற்கு மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருந்தாலும் கிடைக்காத அங்கீகாரத்தை, பிரபலத்தை தமிழில் மூன்றாவது படமான “சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததின் மூலம் நடிகை அபர்ணா பாலமுரளிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் நடித்துள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

சவுந்தர்யா – விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை.. …குவியும் வாழ்த்துக்கள்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விசாகனுக்கு புதிதாகப் பிறந்த குழந்தை பிறந்துள்ள நிலையில் பேரனை வரவேற்றார். ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில், அவர் தனது ஆண் குழந்தை பிறந்ததை தனது கர்ப்ப படப்பிடிப்பிலிருந்து மனதைக் கவரும் படங்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சௌந்தரயா ரஜினிகாந்த் தனது கைகளில் ஒரு விரலைப் பிடித்திருக்கும் படத்தை மட்டுமே பகிர்ந்துள்ளதால், புகைப்படங்களில் குழந்தையின் முகத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் ஒரு சில மகப்பேறு […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபாஸின் மாமாவும் பழம்பெரும் நடிகருமான ‘கிருஷ்ணம் ராஜு ‘ காலமானார்!!

கிருஷ்ணம் ராஜு என்று அழைக்கப்படும் பழம்பெரும் தெலுங்கு நடிகர் உப்பளபதி வெங்கட கிருஷ்ணம் ராஜு ஹைதராபாத்தில் இன்று காலமானார். அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.25 மணியளவில் காலமானார். சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கிருஷ்ணம் ராஜு தனது வாழ்க்கையில் 183 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது கலகத்தனமான நடிப்பு பாணிக்காக அவர் ‘ரெபெல் ஸ்டார்’ என்று பரவலாக அறியப்பட்டார். அவரது இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை மதியம் நடைபெறும்.  1940 ஆம் […]Read More

cinema Indian cinema Latest News News

100 நாட்களை கடந்த விக்ரம்.. வைரலாகும் கமல் வெளியிட்ட ஆடியோ..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் நேற்றுடன் 100 நாளை எட்டியுள்ளது. வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படத்தை, ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர். இந்த நிலையில் நூறாவது நாளை ஏட்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தை குறித்து நடிகர் கமல்ஹாசன் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் நூறாவது நாளை எட்டி இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன் […]Read More

cinema Indian cinema Latest News News

சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’ டீசர் வெளியானது…

சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த  ‘ஓ மை கோஸ்ட்’  எனும் தமிழ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன் 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். கடந்த 2011-ல் அமெரிக்க நடிகரான டேனியல் வெப்பரைத் திருமணம் செய்தார் சன்னி லியோன். அவருக்கு 2018ல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. 2017ல் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து […]Read More

cinema Indian cinema Latest News News

தீபாவளி ட்ரீட்…. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் ‘#வாரிசு’ படக்குழு!!

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை தீபாவளி அன்று வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

பூஜையுடன் துவங்கிய நடிகர் யோகி பாபுவின் புதிய திரைப்படம் !!

தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பதித்து பல்வேறு மக்களின் மனதில் இடம் பிடித்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சமீப காலங்களில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ஒரு கதாநாயகனாகவும், தன் திறமையை நிரூபித்துக் கொண்டு, தன் நடிப்பாற்றலினால் மக்களின் உள்ளத்தை தன் வசமாக்கியுள்ளார். தற்பொழுது அவரது நடிப்பில் கே வி கதிர்வேலுவின் எழுத்து மற்றும் இயக்கத்தில், பிரபல நடன பள்ளியான ராக் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாக இருக்கும் பெயர் சூட்டப்படாத ப்ரொடக்ஷன் நம்பர் ஒன் […]Read More

cinema Indian cinema Latest News News

அதர்வா நடித்துள்ள ‘#டிரிக்கர்’ படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள திரைப்படம் ‘டிரிக்கர்’. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அருண் பாண்டியன், சீதா, முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆக்‌சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘டிரிக்கர்’ படத்திற்கு இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !