Tag Archives: Nayanthara

மருத்துவம் பயிலும் மாணவியா!? பிகில் அப்டேட்!!

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகும் பிகில் படத்தில் விஜய்க்கு நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். யோகிபாபு, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர், போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் விஜய்யின் இரண்டு கதாபாத்திரங்களும் தெரியவந்தது. பட ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை விஜய் குறித்தான தகவல்களே வெளியான நிலையில் நயன்தாரா குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்றால் நயன்தாரா இப்படத்தில் மருத்துவம் பயிலும் மாணவியாக நடித்திருப்பதாக […]

நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலுக்கான உரிமத்தை சுஜாதாவின் மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு விடியும் முன் என்ற படத்தை இயக்கிய பாலாஜிகுமார், தனது தாயார் பெயரில் வாங்கியுள்ளார். தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும் கொலையுதிர் காலம் நாவலின் தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமை மீறல் என்றும், அந்த படத்தை அதே தலைப்பில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் பாலாஜி குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த […]

நயன்தாரா படத்திற்கு இடைக்காலத் தடை!? – நீதிமன்றம்

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலுக்கான உரிமையை, அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு பெற்று, இயக்குநர் பாலாஜி குமார், தனது தாயார் பெயரில் வைத்திருக்கிறார். நடிகை நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் வருகிற 14ஆம் தேதி வெளியிட இருப்பதாக விளம்பரங்கள் வெளியானது. இந்தநிலையில் கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி இயக்குநர் பாலாஜிகுமார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி […]

நயன்தாராவின் ஹனிமூன் ஸ்டில்ஸ் – வைரல் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இருக்கும் அவர் தன் தனிப்பட்ட வாழ்வில் நிறைய பிரச்சனைகளுக்கு பிறகு விக்னேஷ் சிவனுடன் ஒன்றாக சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது விக்னேஷ் சிவனுடன் வெளியில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும். கிரீஸில் உள்ள சாண்டோரினி தீவுக்குத்தான் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சென்றுள்ளார். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவின் லவ்-ஆக்‌ஷன் திரைப்படம்

நயன்தாரா நடிப்பில் உருவான கொலையுதிர் காலம் வரும் 14ல் ரிலீசாகிறது. மேலும், இவர் நடிகர் விஜய்யுடன் அவர் தளபதி 63 படத்திலும், நடிகர் ரஜினியுடன் தர்பார் படத்திலும் நடித்து வருகிறார். அவ்விரு படங்களின் சூட்டிங்கும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவர் மலையாளத்தில் நடிகர் நவின் பாலி நடிப்பிலும் உருவாகி இருக்கும், லவ் ஆக்ஷன் டிராமா என்ற படத்தின் படபிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் அப்படமும் திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் முழு படபிடிப்பும் முடிவடைந்ததையொட்டி படக் குழுவினர் கேக் வெட்டிக் […]

நயன்தாரா இடத்தை பிடித்த அனுஷ்கா!?

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியன் செல்வன்’ வரலாற்று புதினத்தை, படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் செலவீனம், நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படம் தொடங்குவதில் இடையூறு ஏற்பட்டு வந்தது. தற்போது பொன்னியன் செல்வன்’ படத்தை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் மீண்டும் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் […]

தர்பார் லேட்டஸ்ட் நியூஸ் இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கும் படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவு பெற்று அனைவரும் திரும்பி விட்டனர் என படக் குழு அறிவித்துள்ளது. மீண்டும் இந்த படப்பிடிப்பு மும்பையிலேயே இந்த மாத இறுதியிலேயே தொடங்க இருப்பதகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சூர்யா-39 ல் இணையும் நம்பர் 1 நாயகி

சூர்யா இப்பொழுது இறுதி சுற்று இயக்குநர் உடன் சூரரை போற்று படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அவர் நடித்த என் ஜி கே மற்றும் காப்பான் ரிலீஸிற்கு ரெடியாகி வருகின்றன. இந்நிலையில்தான் அவர் சிறுத்தை சிவாவுடன் இணைவதாக தகவல்கள் வெளியானது. இப்பொழுது அந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளன நயன்தாரா தற்பொழுது விஜய்-63 மற்றும் ரஜினியின் தர்பார் படங்களில் நடித்து வருகிறார். அதன் பின்னர் செப்டம்பர் மாதம் தொடங்கும் இந்த படத்தில் நடிக்க […]
Page 3 of 12«12345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news