ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
பொன்னியின் செல்வன் வைரலாகும் ஷூட்டிங் ஸ்டில்ஸ் ! படக்குழுவினர் அதிர்ச்சி!

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். முதல் பாகம் அடுத்தாண்டு வெளியிடப்பட உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ’பொன்னியின் செல்வன்’ புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், புதுச்சேரியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் லீக்காகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடலுக்கு அருகே கப்பல், போர் கேடயங்கள், குடில்கள் போன்று செட்டிங் அமைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.