ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்: யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள்?

‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் பல்வேறு மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்து வருகின்றனர். ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது அதற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரச்சோழனாக பிரகாஷ் ராஜ், நந்தினியாக ஐஸ்வர்யாராய், குந்தவியாக திரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும் நடிக்கின்றனர்.
அதேபோல் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடித்துள்ளனர். ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும், கந்தன் மாறன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2 Comments
Eagerly waiting to see the grandeur epics
The character selection is perfect.