Tag Archives: inandoutcinema news

சந்திரயான்-2 எடுத்த நிலவின் புகைப்படங்கள்!!

சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள உயர் திறன் கொண்ட கேமராவால் எடுக்கப்பட்ட நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, ‘இஸ்ரோ’ சார்பில், ஜூலை, 22ல், சந்திரயான் – 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. படிப்படியாக, இதன் சுற்று வட்டப்பாதை அதிகரிக்கப்பட்டு, நிலவை நெருங்கியது. சந்திரயான் – 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும், ‘விக்ரம்லேண்டர்’ கருவி, செப்.7ல், நிலவை […]

விஜய் படத்தில் சாந்தனு!!?

அட்லீ இயக்கத்தில் ‛பிகில்’ படத்தில் நடித்துள்ள விஜய், இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 64வது படத்தில் நடிக்கிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், நேற்று அதை உறுதிப்படுத்தினார்கள். இந்நிலையில், பிகில் படத்தில் இளம் நடிகர் கதிர் விஜய் உடன் முக்கிய பாத்திரத்தில் நடித்தது போன்று, விஜய் 64வது படத்தில் சாந்தனு நடிக்க இருக்கிறார். நீண்டகாலமாக சினிமாவில் போராடிக் கொண்டிருக்கும் சாந்தனுவிற்கு விஜய் படமாவது திருப்புமுனையை […]

பிக் பாஸ் தர்ஷனின் காதலி மருத்துவமனையில் அனுமதி!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். தர்ஷன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது பெரும் அதிருப்தியை பிக் பாஸ் மீது ஏற்பட்டது. இந்த நிலையில் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க் பற்றி சில நாட்களுக்கு முன்பு தர்ஷனின் காதலி கூறியிருந்தார். […]

திருமணம் செய்யாமலே அஜித் பட நடிகை கர்ப்பம்!!

புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் ஹிந்தி நடிகை கல்கி கோச்லின். ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் ‛நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். கய் ஹெர்ஷ்பெர்க் என்பவரை காதலித்து வரும் கல்கி, அவரை திருமணம் செய்யமாலே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். ‛‛எனக்குள் ஒரு உயிர் வளர்கிறது என்ற உணர்வே தனி மகிழ்ச்சி அளிக்கிறது. என் மன திருப்திக்காக தொடர்ந்து வேலை செய்ய விரும்புகிறேன்” என கூறியுள்ளார் கல்கி. தற்போது 5 மாத கர்ப்பமாக இருக்கும் […]

திருமண சர்ச்சை: விக்னேஷ் சிவன் முற்றுப்புள்ளி

நடிகை நயன்தாரா உடன் டிச.,25ல் திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான செய்தியை இயக்குநர் விக்னேஷ் சிவன் மறுக்கிறார். அவர் கூறுகையில், என்ன வேண்டுமானாலும் எழுதட்டும், எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. அடுத்தடுத்து நிறைய வேலைகள் உள்ளன. சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கும் வேலையும், நயன்தாரா நடிக்கும் படத்தின் தயாரிப்பு வேலைகளும் நடக்கின்றன. அதனால் இப்போதைக்கு திருமணம் இல்லை. இதற்கு மேலும் நான் இதுப்பற்றி விளக்க முடியாது என்றார்.

நான் சிரஞ்சீவின் மிகப்பெரிய ரசிகன்-இயக்குநர் மோகன் ராஜா!!

இந்தியாவே திரும்பி பார்க்கும் படைப்பாக அனைத்து மொழிகளிலும் இருந்து பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்க, தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் உருவாகியிருக்கிறது சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அக்டோபர் 2, 2019 ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. படக்குழுவுடன் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். தமிழில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் […]

படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் அருண் விஜய்!!

நடிகர் அருண் விஜய் அவர்களின் திரைவாழ்க்கை என்பது வெற்றிக் கனிகளும், காயங்களும் இரண்டறக் கலந்ததுதான். திரைப்படங்களின் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது ஏற்படும் காயங்களை, வெற்றிப் படிகளில் ஏறக்கிடைக்கும் வாய்ப்பாக  அவர்  தன்னுள் அடைகாத்துக்கொள்கிறார் என்பதுதான் நிதர்சனம்.ஜி,என்.ஆர்.குமாரவேலன்  இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் புதிய படமொன்றின் சண்டைக்காட்சியில் மீண்டும் ஒரு விழுப்புண் அவர் உடலில் ஏறியிருக்கிறது. ஆம். சண்டைக்காட்சியில் மீண்டும் காயமடைந்திருக்கிறார் அருண் விஜய். இது குறித்து புன்னகையுடன் அருண் விஜய் கூறியதாவது…“எதிர்பாராத முறையில் ஏற்பட்ட இந்தக் காயம், நடிகர் என்ற […]

அஜித்தோடு ஜோடி சேரும் ராஷ்மிகா! ?

தலைப்பைப் பார்த்ததும் பதற வேண்டாம், திரையில் தான் அப்படி இருக்க வேண்டும் என ராஷ்மிகா ஆசைப்படுகிறாராம். தமிழில் இப்போது தான் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. ஆனாலும், தெலுங்குப் படங்களான ‘கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்’ படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமாகிவிட்டார். ‘பிகில்’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்திலும் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ‘சரிலேறு நீக்கெவரு’ […]

மீண்டும் ரசிகர்களைக் கவர வருகிறான் சாகச நாயகன் ஸ்பைடர்மேன்!!

மார்வல் காமிக்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கும் சோனி நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக முரண்பாடு நீங்கியதையடுத்து மீண்டும் ஸ்பைடர் மேன் படங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் திரையில் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டதாக கருதப்பட்ட ஸ்பைடர் மேன் மீண்டும் தனது ரசிகர்களை மகிழ்விக்க புதிய படங்களில் தோன்ற உள்ளார். சோனியும் மார்வல் நிறுவனமும் இணைந்து அடுத்த ஸ்பைடர் மேன் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளன. இரண்டு பெரிய படத்தயாரிப்பு நிறுவனங்களிடையே ஏற்பட்ட மோதலால் ஸ்பைடர் மேன் படங்கள் இனி தயாரிக்கப்பட மாட்டாது […]
Page 1 of 8912345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news