ஓடிடியில் ‘வெள்ளை யானை’…படக்குழுவினர் எடுத்த நல்ல முடிவு!

 ஓடிடியில் ‘வெள்ளை யானை’…படக்குழுவினர் எடுத்த நல்ல முடிவு!

இயக்குனர் சுப்ரமண்யம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு ஆகியோர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட திரைப்படம் வெள்ளை யானை. முதலில் இந்த படத்தை தனுஷ்தான் தயாரித்து வந்தார்.

ஆனால் அதன் பிறகு இப்போது அவரின் மேலாளர் வினோத் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது. விவசாயிகளின் அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள மற்றொரு படமாக இது இருக்கும் என்பது அதன் காட்சிகளில் தெரிகிறது.

நீண்ட ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்த இந்த திரைப்படம் இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் பின்னர் சன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.

திரையரங்குகளில்தான் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என இயக்குனர் காத்திருந்த நிலையில் தற்போதுள்ள சூழலில் அது சாத்தியம் இல்லை என்பதால் இந்த முடிவை படக்குழு எடுத்ததாக தெரிகிறது.

  • 2 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !