Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

பிரபல நடன இயக்குனரின் உடற்பயிற்சி செயலியை தொடங்கி வைத்த கமல்ஹாசன்!!

சூது கவ்வும்’ தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார். தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை நடிகர் கமல்ஹாசன் துவக்கி […]Read More

cinema Indian cinema Latest News News

அருள்நிதியுடன் இணைந்த உதயநிதி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

சார்பட்டா 2-க்கு தயாராகும் ஆர்யா! வைரலாகும் வீடியோ!!

நடிகர் ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதிலும் நாயகனாக ஆர்யாவே நடிக்கிறார். இந்நிலையில், ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது சார்பட்டா 2 படத்திற்காக என தகவல்கள் வெளியாகியுள்ளன.Read More

cinema Indian cinema Latest News News

படப்பிடிப்பை தொடங்கிய பிரித்விராஜ் படக்குழு!!வெளியான சூப்பர் அப்டேட்!!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ் ‘ஜெய ஜெய ஜெய ஹே’படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘குருவாயூர் அம்பல நடையில்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்துக்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. தெய்வத்தின் பெயரை படத்திற்கு வைத்து கேலி செய்வதற்குத் திட்டமிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்தனர். படத்தின் பெயரை காரணமாக வைத்து பிரித்விராஜுக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க […]Read More

cinema Indian cinema Latest News News

மொய்தீன் பாயாக நடித்திருக்க வேண்டிய சூப்பர் ஸ்டார் இவர்தான்!

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள சிறப்பு தோற்றத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். லால் சலாம் படத்தின் முதல்கட்ட படபிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்த நிலையில், தற்போது மும்பையில் ரஜினி நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 20 நிமிடங்கள் இப்படத்தில் ரஜினியின் காட்சிகள் இடம்பெறும் […]Read More

cinema Indian cinema Latest News News

நாக சைதன்யா நடித்த படம் ‘வெற்றியா அல்லது தோல்வியா’ ? #கஸ்டடி விமர்சனம்

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த நன்றிக்குப் பிறகு, நாக சைதன்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கஸ்டடி இன்று மே 12 அன்று திரைக்கு வந்தது. வெங்கட் பிரபு இயக்கிய இந்த தெலுங்கு-தமிழ் இருமொழிப் படம் கதாநாயகனை (நாக சைதன்யா) சுற்றி வருகிறது. எதிரியை (அரவிந்த் சுவாமி) எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை அவர் காவலில் வைக்க வேண்டும்.  நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்த கஸ்டடி படத்தின் முதல் விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஒரு ட்விட்டர் பயனரான மேடி ரிவ்யூஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

”என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று..” இயக்குனர் செல்வராகவன் பதிவு!

‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபர்ஹானா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான ‘ஃபர்ஹானா’ திரைப்படம் இன்று (மே 12) திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை […]Read More

cinema Indian cinema Latest News News

மேக்கிங் வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு படக்குழு!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். ‘கஸ்டடி’ திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய […]Read More

cinema Indian cinema Latest News News

எதிர்பார்ப்பை தூண்டும் மாடர்ன் லவ் சென்னை டிரைலர்!

மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவீனயுக காதல் கதைகளை மையமாக வைத்து முன்னெடுக்கப்பட்ட ஆந்தாலஜி வகை இணையத் தொடர் ‘மாடர்ன் லவ்’. ஏற்கனவே, ’மாடர்ன் லவ் மும்பை’, ’மாடர்ன் லவ் ஹைதராபாத்’ ஆகிய சீரியஸ் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் வருகிற மே 18 ஆம் தேதி மாடர்ன் லவ் சென்னை தொடரும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இத்தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் இளையராஜாவின் பின்னணிப் பாடலில் 6 […]Read More

cinema Indian cinema Latest News News

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ‘நானா புளுகு’ பாடல் விடியோவை வெளியிட்ட படக்குழுவினர்…

பிச்சைக்காரன் 2 படத்தின் நானா புளுகு பாடல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. ‘பிச்சைக்காரன்-2’படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சோ்ந்த ராஜ கணபதி தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகா் ஆா்.பாண்டியராஜன் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு ‘ஆய்வுக்கூடம்’ என்ற […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !