Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

வரலட்சுமி சரத்குமாரின் ‘சபரி’ படத்தின் கிளிம்ஸ் விடியோ! 

சமீபத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் பல விருதுகளை வென்ற அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி நாயகியாக நடிக்கும் வி3 திரைப்படம் வெளியானது. இந்தப்படம் சமூகத்தில் நடக்கும் பாலியல் குற்றம் குறித்து எடுக்கப்பட்டிருந்தது.  தற்போது வரலட்சுமியின் சபரி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தினை அனில் கட்ஸ் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் 2022இல் முடிவடைந்தது. தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.  சைக்கோ த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் வரலட்சுமி இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

“வீரம் வெளஞ்ச கோட்டம் எங்கள் #இராவணகோட்டம் ”சாந்தனு – விக்ரம் சுகுமாரன் படத்தின்

நடிகர் சாந்தனு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இராவண கோட்டம்’ படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் விக்ரம் சுகுமாரன். இவர் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த எதிர்பார்ப்பு நிலவிவந்தது.இந்நிலையில், நடிகர் சாந்தனுவை வைத்து ‘இராவண கோட்டம்’ என்கிற படத்தை இயக்கிவந்தார். கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றது. இதில் சாந்தனு, ஆனந்தி, பிரபு, சத்யா என்.ஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக […]Read More

cinema Indian cinema Latest News News

Ant-Man And The Wasp Quantumania புதிய டிரெய்லர் வெளியீடு!

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற சூப்பர்ஹீரோக்களில் ஒருவர் ஆண்ட்மேன் (Ant man). இவரால் எறும்பு அளவு குட்டியாகவும் மாற முடியும், ஒரு கட்டிடம் அளவிற்கு பெரிதாகவும் ஆக முடியும். இந்த ஆண்ட் மேன் சூப்பர் ஹீரோவுக்கு இதுவரை Antman, Antman and the Wasp என்ற இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் குவாண்டமிற்குள் சென்று வந்த ஸ்காட் லாங் (ஆண்ட்மேன்) காலப்பயணம் குறித்து கண்டுபிடித்து தானோசை வீழ்த்தி மறைந்தவர்களை மீட்க உதவுவார். […]Read More

cinema Indian cinema Latest News News

வாரிசு – துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து.. ரசிகர்கள் ஏமாற்றம்.

விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர். இப்படங்களின் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பான் இந்திய திரைப்படமாக தயாராகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட பார்வையும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘HIT 2’ எனும் திரைப்படத்தின் மூலம் இரட்டை ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் அடிவி சேஷ். இவரது நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘G2’ ( கூடாச்சாரி 2) என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆஸ்கார் ரேஸில் இணைந்த #காந்தாரா !! மகிழ்ச்சியில் ரிஷப் ஷெட்டி..

எஸ்.எஸ்.ராஜமௌலிக்குப் பிறகு, 2023 ஆஸ்கார் விருதுகளை எட்டிய மற்றொரு தென் திரைப்படம் ரிஷப் ஷெட்டியின் பிளாக்பஸ்டர் என்டர்டெய்னர் காந்தாரா. உலகளவில் கைதட்டலைப் பெற்ற தெய்வீக நாடகம், இப்போது இரண்டு பிரிவுகளின் கீழ் அகாடமி விருதுகள் சர்ச்சை பட்டியலில் தகுதி பெற்றுள்ளது. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் பிரிவுகளின் கீழ் இப்படம் ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.ரிஷப் ஷெட்டி செவ்வாயன்று ட்விட்டரில் பதிவு செய்து , பரிந்துரை பட்டியல் அறிவிப்புக்கு முன்னதாக காந்தாராவுக்கு இரண்டு ஆஸ்கார் […]Read More

cinema Indian cinema Latest News News

வாரிசு படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்; அப்டேட் கொடுத்த படக்குழு !!

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என […]Read More

Uncategorized

“இல்லம் தோறும் வள்ளுவர்” திட்டத்தில் முதல் சிலையை மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி

உலகப்பொதுமறை தந்த வள்ளுவ பெருந்தகையின் சிலையை அனைவர் வீட்டு வரவேற்பரையிலும் கொண்டு சேர்க்கும் முயற்சியில், பிரபல SILAII(சிலை) நிறுவனம் வள்ளுவர் சிலையை மிகக்குறைந்த விலையில் உருவாக்கி அளித்து வருகிறது. இத்திட்டத்தின் துவக்கமாக முதல் வள்ளுவர் சிலை “மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதிக்கு” அளிக்கப்பட்டது. தலைவர்கள், அறிஞர்கள், பிரபலங்களின் சிலைகளை புதிய தொழில்நுட்பத்தில் கல் சிலையாக வடிப்பதில் மிகப்புகழ்பெற்ற நிறுவனம் SILAII(சிலை) நிறுவனம் ஆகும். நம் மனித இனத்திற்கு உலகப்பொதுமறையாம் திருக்குறளை தந்த தத்துவஞானி “திருவள்ளுவர்” சிலையை ஒவ்வொரு […]Read More

Uncategorized

நாகூர் தர்காவுக்கு ஆட்டோவில் வந்து இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்!!

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்தூபி இசையுடன் கோலாட்டம், பறையாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றன. இதில் கலந்துகொள்வதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்து இறங்கினார். […]Read More

cinema Indian cinema Latest News News

‘எனது ட்வீட்டை நீக்கிவிட்டேன்… என்னை மன்னியுங்கள்.. ‘ மனோபாலா!? தளபதி67 அப்டேட் தந்தத்துக்கு

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !