Tags : # cinemanews #Tollywood #Inandoutcinema
தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இயக்குனர் அட்லீ நேற்று (21-09-2022) தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு […]Read More
கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின்செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் […]Read More
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நானே வருவேன்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘நானே வருவேன்’ படத்தை படக்குழு சென்சாருக்கு அனுப்பியுள்ளது. சென்சார் போர்ட் […]Read More
ரவி தேஜா தற்போது தனது முதல் பான்-இந்தியா படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தில் பணிபுரிந்து வருகிறார். இயக்குனர் வம்சி இயக்கத்தில், பிரபல திருடனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஏற்கனவே திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. தற்போது, நடிகை ரேணு தேசாய் உடன் அனுபம் கெர் படத்தின் செட்டில் இணைந்துள்ளார். கூடுதலாக, படத்தின் செட்களில் இருந்து ஒரு BTS வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. கிளிப் ஒரு குடிசையுடன் ஒரு கிராமப்புற பின்னணியைக் கொண்டுள்ளது, இறுதியில், படத்தின் தயாரிப்பாளர் வம்சி கேமராவுக்கு […]Read More
அஜித், தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் தற்போது செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்போஸ்டரில் ஸ்டைலான லுக்கில் அஜித் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்த போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை […]Read More
மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடித்திருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்தில் இடம்பெற்ற ”தார் மார் தக்கரு மார்…’ என தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான்கான் இருவரும் இடம் பெறும் ‘தார் மார் தக்கரு மார்..’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் […]Read More
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ஆர்.சி 15 ஆகிய இரண்டு […]Read More
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கிறார். ‘சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷான், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனிடையே தனுஷ் சில தினங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ என குறிப்பிட்டு புது லுக்கில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ […]Read More
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்கி பிரபலமான மோகன்.ஜி. தற்போது ‘பகாசூரன்’ படத்தை இயக்கி வருகிறார். ‘ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்’ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘பகாசூரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘சிவ சிவாயம்’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது […]Read More
அஜித் – எச். வினோத் – போனிகபூர் ஆகியோரது கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் ஏகே 61. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்திற்கு ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரில் அஜித் கையில் […]Read More