Tags : cinema update

cinema Indian cinema Latest News News

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சகோதரருடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் கைவசம் ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2-ம் பாகம் போன்ற படங்கள் உள்ளன. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராகவா லாரன்ஸ், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவரின் சகோதரர் எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் லாரன்ஸும் மாஸான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதிரடி […]Read More

cinema Indian cinema Latest News News

‘#அண்ணாத்த’ பட வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அண்ணாத்த படத்தை இணையதளங்கள் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   நடிகர் ரஜினிகாந்த் நடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். அண்ணத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல கன்னட சூப்பர் நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்!ரசிகர்கள் அதிர்ச்சி!!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வந்த அவர், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46. நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் […]Read More

cinema Indian cinema Latest News News

திடீரென மருத்துவமனையில் ரஜினி அனுமதி! ரத்த குழாய் திசுக்கள் சேதம்! அதிர்ச்சில் ரசிகர்கள்…

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

காஜல் அகர்வால் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் தமன்னா! வெளியான புதிய அப்டேட் !!

தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’வேதாளம்’ திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. . போலோசங்கர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அஜித் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார் என்பதும் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் . ஸ்ருதிஹாசன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இப்போது அவர் விலகியுள்ளதாகவும் அவருக்குப் […]Read More

cinema Indian cinema Latest News News

கவனம் ஈர்க்கும் ஜெய் நடிப்பில் ‘ #சிவசிவா ‘ படத்தின் அம்மம்மா’ பாடல்!

இயக்குநர் சுசீந்திரன் தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கிராமத்து இளைஞர்களின் வாழ்வையும், விளையாட்டையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜீவா, மாவீரன் கிட்டு, ஈஸ்வரன் உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.  இந்தநிலையில் நடிகர் ஜெய் நடிக்கும் சிவ சிவா படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கி வருகிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக மீனாக்ஷி கோவிந்தராஜன் நடிக்கிறார். காளி வெங்கட், பாலா சரவணன் படத்தில் முக்கிய […]Read More

cinema Indian cinema Latest News News

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான மின்னல் முரளி டிரைலர்!

டொவினோ தாமஸ் நடித்த சூப்பர்ஹீரோ படமான மின்னல் முரளி டிசம்பரில் வெளியாவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சூப்பர் ஹீரோ திரைப்படம் மின்னல் முரளி. மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. முதலில் திரையரங்கில்தான் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா நெருக்கடி காரணமாக படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் #’தனுஷ்’! வெளியான புதிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.  இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘விடுதலை’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி […]Read More

cinema Indian cinema Latest News News

‘#யானை’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!

அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.  இப்படம் கிராமத்து பின்னணியில் தயாராகி வருகிறது. ஏற்கனவே தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !