Tags : cinema news

cinema Indian cinema Latest News News

#மாவீரன் படத்தில் கட்சிக் கொடியா? உயர்நீதிமன்றம் உத்தரவு!!

இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் ‘மாவீரன்’ படத்தின் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகா் சிவகாா்த்திகேயன், அதிதி ஷங்கா் நடிப்பில் ரூ.60 கோடி செலவில், உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி உள்ளாா். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி, […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெயிலர் படத்தின் 2-வது பாடல் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான காவாலா எனத் தொடங்கும் பாடலின் முன்னோட்டம் கடந்த சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் பற்றிய அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.Read More

cinema Indian cinema Latest News News

மார்க் ஆண்டனி – விஷால் கொடுத்த அப்டேட்!

மார்க் ஆண்டனி திரைப்படத்தைக் குறித்து விஷால் அப்டேட் கொடுத்துள்ளார். நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். டைம் டிராவலை மையமாகக் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி 50: படத்தின் பெயர் அறிவிப்பு!வெளியான சூப்பர் அப்டேட்!!

நடிகர் விஜய் சேதுபதி குரங்கு பொம்மை இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இரண்டு புதிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக ‘விஜேஎஸ்51’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

லால் சலாம் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி!

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். லால் சலாம் படத்தின் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்தநிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் சில தினங்கள் நடைபெற்றது. இதில், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினியின் காட்சிகள் 20 நிமிடங்கள் வரை இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.Read More

cinema Indian cinema Latest News News

உஷாரா இருங்க!! விக்னேஷ் சிவனை எச்சரிக்கை செய்த ஷாருக்கான்!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை […]Read More

cinema Indian cinema Latest News News

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் “கிடா” திரைப்படம்.. உற்சாகத்தில் படக்குழு!!

அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் கிடா (Goat). மேலும் மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்தை ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்துள்ளனர். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ள கிடா […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் விஜய்யுடன் இணையும் ஷங்கர்!?ட்ரெண்டிங்கில் #தளபதி70 !!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2012ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்’ படத்தில் நடித்திருந்தார். இதில் விஜய்யுடன் இணைந்து ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நண்பன் படத்திற்கு பிறகு ஷங்கர் மீண்டும் விஜய்யுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யிடம் படத்தின் ஒன்லைனை ஷங்கர் கூறியதாகவும், இது விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி 50-வது படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை […]Read More

cinema Indian cinema Latest News News

அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்க மாட்டேன்: விஜய்!!

நடிகா் விஜய்யின் மக்கள் இயக்கம் சாா்பில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 1,600 மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நடிகர் விஜய் மேடையில் நின்றவாறு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் – ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்வு மூலம் தொகுதிவாரியாக அரசியலில் தன்னை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !