Tags : celebrity update

cinema Indian cinema Latest News News

கொண்டாட்டத்திற்கு தயாராகும் அஜித் ரசிகர்கள்… ‘விசில் தீம்’ அப்டேட்டை வெளியிட்ட வலிமை படக்குழு

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ‘வலிமை’ படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘வலிமை’ படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

‘சசிகுமார்21’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில்  இயக்குநராக அறிமுகமான சசிகுமார் நாடோடிகள், சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘எம்.ஜி.ஆர் மகன்’ மற்றும் ‘ராஜவம்சம்’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் சத்யசிவா இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான கழுகு திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

‘இது மிகவும் வலிக்கிறது’: நடிகர்கள் தாங்க வேண்டிய வலி பற்றி வெளிப்படுத்திய #ராஷ்மிகா!

ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பினார், வதந்தியான பியூ விஜய் தேவரகொண்டாவுடன் அவர் வெளியேறிய படங்கள் வைரலானது. ஒரு நாள் கழித்து, அவர் ஒரு நடிகராக மாறியதன் வீழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இன்ஸ்டாகிராமிலும் சென்றார். வெற்றிகரமான நடிகர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்று ஒருவர் உணர்ந்தாலும், நல்ல விஷயங்கள் எளிதில் வராது. பொழுதுபோக்கிற்குள் நுழைவதற்கு கடின உழைப்பு மற்றும் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். செவ்வாயன்று, புஷ்பா நட்சத்திரம் நடிப்பில் தங்கள் வாழ்க்கையைத் தொடர […]Read More

cinema Indian cinema Latest News News

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ ஃபர்ஸ்ட் சிங்கள் அப்டேட் !

‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘மாநாடு’ வெற்றி விழாவுக்கு சிம்பு வந்திருக்க வேண்டும்; கஷ்டமாக இருக்கிறது: எஸ்.ஏ.சந்திரசேகர்

வெங்கட் பிரபு, சிம்பு கூட்டணியில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த மாதத்தின் இறுதியில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர், திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், “இந்தப் படத்தில் எனக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், பைனான்சியர் என அனைவரும் மேடையில் இருப்பதை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன். அவர்களை மேடையேற்றிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு வாழ்த்துகள். […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த தமிழ் படத்தில் இணைந்த யுவன் ஷங்கர்!

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கொஞ்சம் பொழுதுபோக்கு, சமூக கருத்துகள் உள்ளிட்டவற்றை வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், இவரது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

சமந்தாவின் ‘யசோதா’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா ‘யசோதா’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரி நாராயணன் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். மணிசர்மா இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், […]Read More

cinema Indian cinema Latest News News

#F3: தமன்னா நடிக்கும் ‘ஃபன் அண்ட் ஃப்ரஸ்ட்ரேஷன்’ ரிலீஸ் தேதியை மாற்றிய படகுழு

25 பிப்ரவரி 2022 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்ட தெலுங்குப் படம் F3: Fun and Frustration, இப்போது ஏப்ரல் 29-ஆம் தேதிக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதை அறிவித்த தில் ராஜு, “பீமலா நாயக்கின் வெளியீட்டை எளிதாக்கும் வகையில், எங்களின் F3 திரைப்படத்தை பிப்ரவரி 25-ல் இருந்து மாற்றுகிறோம். ஏப்ரல் 1ஆம் தேதி சர்க்காரு வாரி பாடா மற்றும் ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎஃப் அத்தியாயம் 2 அறிவிக்கப்பட்டதால், எஃப்3மூவி இப்போது ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாகிறது.”  மேலும், பவன் […]Read More

cinema Indian cinema Latest News News

துல்கர் சல்மான் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா !

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் துல்கர் சல்மான், தமிழிலும் கணிசமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் கடைசியாக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தமிழில் பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் ‘ஹே சினாமிகா’ என்ற படத்தில் நடித்துவருகிறார். நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் முதன்முதலில்  இப்படம் மூலம் இயக்குநராக சினிமா துறையில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் துல்கர் […]Read More

cinema Indian cinema Latest News News

கையில் சுத்தியலுடன் நயன்தாரா… வைரலாகும் ‘ராக்கி’ ப்ரோமோ வீடியோ!

தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !