Tags : celebrity news

cinema Indian cinema Latest News News

நாகார்ஜுனா நடிக்கும்  ‘தி கோஸ்ட்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் !!

நாகார்ஜுனா அடுத்ததாக தி கோஸ்ட் என்ற ஆக்‌ஷன் த்ரில்லரில் நடிக்கிறார். ஒரு முக்கியமான கால அட்டவணைக்காக அவர் அணியுடன் 3 வாரங்கள் துபாயில் இருந்துள்ளார் . பல அதிரடி காட்சிகள் மற்றும் ஒரு தென்றல் பாடலை படமாக்கிய பிறகு, குழு துபாய் அட்டவணையை முடித்துள்ளது. நடிகர் இந்தியா திரும்பி ஹைதராபாத்தில் அடுத்த அட்டவணையை மீண்டும் தொடங்குவார்.  இந்த நீண்ட ஷெட்யூலில், படத்தின் முக்கியப் பகுதிகளின் படப்பிடிப்பை துபாயில் படக்குழுவினர் முடித்துள்ளனர். இந்த ஷெட்யூலில் அதிக தீவிரமான ஸ்டண்ட் காட்சிகள், சில முக்கிய காட்சிகள் மற்றும் ஒரு காதல் பாடல் […]Read More

cinema Indian cinema Latest News News

பா.ரஞ்சித்தின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் பா.ரஞ்சித். இவர் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’ போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கலையரசன் நடிப்பில் வெளிவந்த ‘குதிரைவால்’ படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் ‘நீலம்’ தயாரிப்பின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கியுள்ளார். டோனி […]Read More

cinema Indian cinema Latest News News

‘தளபதி 66’: விஜய்க்கு ஜோடியாகும் பிரபல ஹிந்தி நடிகை?

சன் பிக்சர்ஸ் தயாரித்து விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படம் பான் இந்தியா படமாக ஏப்ரல் 13-ல் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கிறது. இதனை அடுத்து நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 66’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், படப்பிடிப்பிற்காக சென்னைக்கு அருகில் மிக பெரிய பொருட்செலவில் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘#பாட்னர்’ பட ஃபர்ஸ்ட் லுக்!

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மொத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் […]Read More

cinema Indian cinema Latest News News

ஐஏஎஸ் அதிகாரியாக மிரட்டும் நித்தின் ; #MacherlaNiyojakavargam  டீசர் அவுட்!!

பல்துறை நாயகன் நிதின் தனது அடுத்த வெளியீடான மச்சர்லா நியோஜகவர்கத்தில் குண்டூர் மாவட்ட கலெக்டராக முதல் பொறுப்பை ஏற்கும் சித்தார்த் ரெட்டி என்ற ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.  எம்.எஸ்.ராஜ சேகர் ரெட்டி இந்த மாஸ் மற்றும் ஆக்‌ஷன் என்டர்டெய்னரை இயக்குகிறார், சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி இதை ஆதித்யா மூவிஸ் & என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரேஷ்த் மூவிஸ் மூலம் தயாரிக்கின்றனர். ராஜ்குமார் அகெல்லா படத்தை வழங்குகிறார். இன்று நித்தினின் பிறந்தநாள் என்பதால், படத்தின் முதல் தாக்குதலை […]Read More

cinema Indian cinema Latest News News

இன்று விஜயின் ’#பீஸ்ட்’ படத்தின் அடுத்த அப்டேட்? – நெல்சன் பகிர்ந்த ட்வீட்!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசர் வெளியாகலாம் உள்ளிட்ட ஏதாவது ஒரு அப்டேட் நாளை வெளியாகலாம் என அப்படத்தின் இயக்குநர் நெல்சனின் ட்வீட் மூலம் தெரியவந்துள்ளன. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயை வைத்து இயக்கி வருவதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்தப் […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குநர் குமாரராஜாவுக்கு நன்றி – விஜய் சேதுபதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்த ட்வீட்!

தனது நடிப்பு திறமைக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்தப் படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, இயக்குநர் குமாரராஜாவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. அதேபோல், ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் தியாகராஜன் குமாரராஜா. இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில், பகத் ஃபாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி […]Read More

cinema News Tamil cinema

உதயநிதி – மாரி செல்வராஜின் ‘#மாமன்னன்’: படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்!

உதயநிதியின் ‘மாமன்னன்’ படப்பிடிப்புக் குறித்த அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். ‘பரியேறும் பெருமாள்’ மூலம் தமிழின் முன்னணி இயக்குநரானார் மாரி செல்வராஜ். அடுத்ததாக, அவர் இயக்கிய ‘கர்ணன்’ அடக்குமுறைகளுக்கு எதிராக வாள் ஏந்தி நின்றது. இரண்டு படங்களும் பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்த நிலையில், நடிகர் உதயநிதியை வைத்து ‘மாமன்னன்’ படத்தை கடந்த மார்ச் 4 ஆம் தேதிமுதல் இயக்கி வருகிறார். உதயநிதியுடன் ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

‘#RRR படத்தால் அதிருப்தி ‘ – சமூக வலைதளத்தில் வெளிக்காட்டிய ஆலியா பட்  !!

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம், கடந்த 25ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வசூல் ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியை ரசிகர்கள் மற்றும் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் ஒருபுறம் கொண்டாடிக்கொண்டிருக்க, மற்றொருபுறம் நடிகை ஆலியா பட் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ராம் சரணின் காதலியாக சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிக்க […]Read More

cinema Indian cinema Latest News News

‘நானே வருவேன்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை?

கலைப்புலி எஸ் தாணுவுடைய ‘வி க்ரியேஷன்’ தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘நானே வருவேன்’. இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக இந்துஜா நடித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தினுடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தினுடைய போஸ்டர் ஒன்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !