cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அறிவிப்பு!!

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய அறிவிப்பை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..

வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் வருகிற […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதற்கிடையில், ‘பிரின்ஸ்’ […]Read More

cinema Indian cinema Latest News News

‘லவ் டு டே’ டிரைலரை வெளியிடும் சிம்பு! 

கோமாளி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக தானே ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள படம் லவ் டுடே. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கனவே சாச்சிட்டாளே என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது என்னை விட்டு என்ற பாடலின் ப்ரமோ வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப் பாடலை பிரதீப் ரங்கநாதன் எழுதியுள்ளார்.  லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஜீம் பூம் பா’ தொடர் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை!

ஜீம் பூம் பா, மர்ம தேசம் உள்ளிட்ட தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- 1990 காலகட்டங்களில் வெளியாகி அனைவரது மனதிலும் இடம்பிடித்த தொடர்கள் மர்ம தேசம், விடாது கருப்பு, ஜீம் பூம் பா. இந்த தொடர்களில் ராசு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமடைந்தவர் லோகேஷ். நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கண்ணுபடப் போகுதய்யா படத்திலும் நடித்துள்ளார். மேலும், 6 அத்தியாயம் என்ற குறும்படத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

முப்பரிமான தொழில்நுட்பத்தில் அசத்தும் ‘ஆதி புருஷ்’ பட டீசர்

ஆதி புருஷ்’ படத்தின் டீசர், 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி, பார்வையாளர்களுக்கு மிகப்பிரம்மாண்டமான காட்சி ரீதியிலான விருந்தை அளித்திருக்கிறது இந்திய திரையுலக வரலாற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசர்களில் ‘ஆதி புருஷ்’ பட டீசர் ஒன்று. ராமாயண காவியத்தின் நவீன கால பதிப்பைத் தழுவி, முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்புடன், ‘ஆதி புருஷ்’ தயாராகி இருக்கிறது. உலகின் புனிதமான நகரங்களில் ஒன்றான அயோத்தியின் சரயு நதிக்கரையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையில், ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரம்மாண்டமான டீசர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு!

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள்… “கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.” என்று பேசினார். இந்தக் கருத்து மிக உண்மையானது. சரியானது! இராசராசச்சோழனை […]Read More

cinema Indian cinema Latest News News

கங்கனா படத்தில் இணையும் விக்ரம்; வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் சில தினங்களுக்கு முன்ப வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்தாதக பா.ரஞ்சித் இயக்கும் ‘சியான் 61’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல்ராஜா தயாரிக்க ஜி. வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் அடுத்ததாக கங்கனா ரணாவத் நடிக்கும் சீதா (The Incarnation – Sita) […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் சத்யராஜின் 230வது படத்தின் போஸ்டர் !

இன்று சத்யராஜின் பிறந்த நாளையொட்டி, அவர் நடிக்கும் 230வது படத்திற்கு ‘வெப்பன்’ என பெயரிட்டு, டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.  சவாரி படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இப்படத்தை இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். எம்.எஸ். மன்சூர் இந்தப் படத்தினை தயாரிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி இந்தப் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உட்பட பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More

cinema Indian cinema Latest News News

நானி நடிக்கும் #தசரா படத்தின் பிரஸ்ட் சிங்கிள் !!

ஆண்டே சுந்தராணிகி படத்திற்குப் பிறகு, நானி அடுத்ததாக தசரா திரைப்படத்தின் மூலம் பெரிய திரைகளில் வலம் வரவுள்ளார். ஏற்கனவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் சலசலப்பைச் சேர்த்து, தயாரிப்பாளர்கள் தூம் தாம் தோஸ்தான் என்ற தலைப்பில் திரைப்படத்தின் முதன்மை பாடலை வெளியிட்டுள்ளனர். உற்சாகமான எண் ஒரு பொதுவான தெலுங்கானா பாணி நாட்டுப்புற டிராக்காக தொடங்குகிறது. கொஞ்சம் ஆற்றலைச் சேர்க்க, தரணி (நானி) இசைக்குழுவுக்கு ஒரு மது பாட்டிலை வழங்குகிறார். சலசலப்புக்கு நன்றி, சிங்கிள் விரைவில் மிகப்பெரிய உள்ளூர் தெரு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !