cinema Indian cinema Latest News News

விரைவில் வெளியாகும் லவ் டுடே படத்தின் அடுத்த பாடல்!!

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தனது முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஜெயம் ரவியுடன் இணைந்து யோகிபாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, […]Read More

cinema Indian cinema Latest News News

அருள்நிதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அருள்நிதி நடிப்பில் ஜூலை 22-ஆம் தேதி வெளியான ‘தேஜாவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘டைரி’. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து ‘டைரி’ படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு […]Read More

cinema Indian cinema Latest News News

முதல் கட்டத்தை முடித்த ‘சந்திரமுகி -2’ படக்குழு!!

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு மைச்சூரில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. […]Read More

cinema Latest News News Tamil cinema

தெலுங்கு கற்றுக் கொள்ளும் சிவகார்த்திகேயன்.. காரணம் இதுதானா?

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ படத்திற்காக […]Read More

cinema Indian cinema Latest News News

நயன்தாரா & விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம்… வைரலாகும் வீடியோ !!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை ஆவணப்படமாக நெட்ஃபிக்ஸ் படம் பிடித்துள்ளது. இன்று, ஸ்ட்ரீமிங் தளங்கள் திருமணத்தைப் போன்ற தங்கள் விசித்திரக் கதையின் வீடியோவைப் பகிர்ந்துள்ளன. நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல் என்ற தலைப்பில், இது நடிகையும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஒருவரையொருவர் மனம் விட்டுப் பேசுவதைக் காட்டுகிறது & அவர்கள் காதலில் முற்றிலும் தலைகீழாக இருக்கிறார்கள். சரியான போட்டிகள் சொர்க்கத்தில் செய்யப்படுகின்றன, மேலும் நயன்தாரா நடிகரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடனான காதல் கதையும் அத்தகைய ஒன்றாகும், இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் ‘தியாகி பாய்ஸ்’! வெளியான காஃபி வித் காதல் பாடல்!!

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தற்போது ‘வல்லான்’, ‘தலைநகரம் 2’ மற்றும் ‘ஒன் 2 ஒன்’ படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் காஃபி வித் காதல் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தியாகி பாய்ஸ் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பேரரசு […]Read More

cinema Indian cinema Latest News News

டோக்கியோ திரைப்பட விருதை வென்ற ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’!!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், ‌சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ எனும் திரைப்படம், தமிழர்களுக்கென நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கும் டிஜிட்டல் தளமான ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் ‘ஆஹா’வில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு, ‘ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்’ என தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கியோ திரைப்பட விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெயிலர் படப்பிடிப்பு எப்போது? சூப்பர் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்..

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வரும் 12-ஆம் தேதி அல்லது 22-ஆம் தேதி நடைபெறும்” என கூறினார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கவுள்ளதாகவும், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய […]Read More

cinema Indian cinema Latest News News

படப்பிடிப்பு தளத்திற்கு சீல்; ஷூட்டிங்கை மாற்றிய விஜய் சேதுபதி படக்குழு!

பிரபல இந்தி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் மும்பை அந்தேரியில் உள்ள சித்ரகூட் படப்பிடிப்பு ஸ்டுடியோவில் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திற்காக […]Read More

cinema Indian cinema Latest News News

பா. ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்

முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Pமேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இரண்டாம் போரின் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !