Inandoutcinema - Tamil cinema news

Category: Cinema

“பேட்ட” படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் – செய்தியாக வெளிடிட்ட டிவிக்கு செம டோஸ் விட்ட கார்த்திக் சுப்பராஜ்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் “பேட்ட”. இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுத்தின் சித்திக் உள்பட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு தற்போது வாரணாசியில் நடந்து வருகிறது. இந்நிலையில், படபிடிப்பு தளத்தில எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில இணையத்தளத்தில் கசிந்துள்ளது. மேலும், அந்த படங்களை கொண்டு டீவி சேனல்களில் செய்திகளும் ஒளிபரப்பப்பட்டு […]

ரஜினியின் பேட்ட படத்தில் இணைந்த நடிகர் சசிகுமார் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். […]

ராட்சசன் கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடியது – ஜிப்ரான்

புதுமுக இயக்குனரான ராம் குமார் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்தான் முண்டாசுப்பட்டி ஆகும். இந்தத் திரைப்படத்தில், விஷ்ணு, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதன் பிறகு நான்கு வருட இடைவெளிவிட்டு மீண்டும் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ராட்சசன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ், காளி வெங்கட் மற்றும் முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ள இந்த ராட்சசன் திரைப்படம் வரும் அக்டோபர் […]

இவரை பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது – சீமான்

பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள் ஆகும். இத்திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்கியுள்றாளார். மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னிலையில் இந்த படத்தை சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. சீமான், தோல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், சி.மகேந்திரன், மா. […]

விஜய் தேவரகொண்டா காதல் நாயகன் என்ற முத்திரையை நோட்டா திரைப்படம் உடைக்கும் – சாம் சிஎஸ்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் நோட்டா ஆகும். நோட்டா திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன் பிர்ஸாடா, எம் எஸ் பாஸ்கர், பிரியதர்ஷி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த NOTA படத்துக்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அருவி புகழ் ரேமண்ட் டெரிக் கிராஸ்டா படத்தொகுப்பாளராகவும், டிஆர்கே கிரண் மற்றும் எஸ் எஸ் மூர்த்தி ஆகியோர் கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்திற்கு […]

பிக் பாஸ் பிரபலங்களுடன் நடிகர் சிம்பு. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் – விவரம் உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மஹத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் பிரபலமடைந்தனர். இந்த நிழச்சியில் ஐஸ்வர்யாவும் ரித்விகாவும் இறுதி வரை சென்று, பின்னர் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவை ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் முடிந்து எல்லோரும் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கும் நிலையில், ஜனனி நேற்று டிவிட்டரில் சில புகை படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் சிம்புவுடன் ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் நிற்க அவர்களுடன் சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத் மற்றும் ஹரீஷும் உடன் நிற்கின்றனர். […]

தளபதி விஜயா அல்லது ஸ்டாலினா ? உதயநிதியின் அதிரடி பதில் – விவரம் உள்ளே

தமிழக அரசியல் களத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை அனைவருமே தளபதி என்ற அடைமொழியுடன்தான் பொதுமக்களும் மற்றும் அவரது தொண்டர்களும் அழைப்பார்கள். திமுக கூட்டங்களின் அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள் என அனைத்திலுமே தளபதி என்றே குறிப்பிட்டு இருக்கும். அதே போல் தமிழ் திரையுலகில் இளைய தளபதி என்ற அடைமொழியுடன் விஜய்யை அழைத்துவந்தார்கள். ஆனால், சமீபகாலமாக பலரும் தளபதி விஜய் என்றே அழைத்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. […]

முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் – நடிகர் விஜய் அதிரடி பேச்சு

நடிகர் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவில் இறுதியாக பேசிய நடிகர் விஜய் கூறியதாவது : ஏ.ஆர்.ரஹ்மான் எங்களுக்கு கிடைத்தது […]

இணையத்தில் வைரலாகும் நடிகர் ஜிவி பிரகாஷ் வெளியிட்ட தமிழை ஏற்றிடுவோம் பாடல் – விவரம் உள்ளே

தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றில் ஈடுபாடு உள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அதுகுறித்த கருத்துகளை தொடர்ந்து தெரிவித்துவருவதோடு, தன் ரசிகர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார். கடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அவர் இசையமைப்பில் உருவான ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு பாடல் வெளியாகி அனைவரையும் முனுமுனுக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. சகாயம் ஐஏஎஸ் வரிகளில், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான தமிழ் மொழியை ஏற்றிடுவோம் என்ற பாடல் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாக உள்ளது என முன்பே அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. […]
Page 19 of 71« First...10«1718192021 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news