பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று (05.07.2021) தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் தேமுதிக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும், தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சென்னையில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்தப் போராட்டத்தில், […]Read More
Tags : Vijaykanth
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: * விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. * தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். * ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Read More