சைக்கிள் ஓட்டிய பிரேமலதா விஜயகாந்த்..! வைரலாகும் புகைப்படம்..!

 சைக்கிள் ஓட்டிய பிரேமலதா விஜயகாந்த்..! வைரலாகும் புகைப்படம்..!

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று (05.07.2021) தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் தேமுதிக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும், தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சென்னையில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்தப் போராட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த், சைக்கிள் ஓட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தார். இதில் அக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தற்போது பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்டிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகின்றன. 

அப்போது அவர் பேசியதாவது, தொடர் விலை உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு, கட்டுமான பொருட்கள், மருந்து பொருட்கள் என அனைத்து விலை உயர்ந்து உள்ளது. அதேபோல் தமிழகத்தில் அறிவிக்கப்படாத  மின்வெட்டு என மக்கள் இந்த பேரிடர் காலத்தில் பாதிப்புகுள்ளாகி உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இரும்பு கரம் கொண்டு இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை என கேட்டு கொண்டார். 

 • 18 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !