நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சந்தானம். தொடர்ந்து, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்துள்ளார். சமீபத்தில், இவர் நடித்த ‘பிஸ்கோத்து’ படம், தீபாவளிக்கு வெளியானது. இவர் கைவசம் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், பாரிஸ் ஜெயராஜ், சபாபதி என ஏராளமான படங்களை வைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற […]