Tag Archives: Vishal

சமுத்திரக்கனி படத்தை தானே தயாரித்து நடிக்கும் நடிகர்! ?

நடிகரும், இயக்கநருமான சமுத்திரகனி இயக்கத்தில் ‛நாடோடிகள் 2′ படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிந்து, படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தில் சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா இன்னும் பலர் நடித்துள்ளனர். நிறைய படங்களில் தற்போது, நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து, இந்திரா சவுந்திரராஜன் எழுதிய நாவலான ‛சிவம்’ என்ற ஆன்மிக நாவலை, ஆன்மிகம் கலந்து, படமாக்க முடிவெடுத்திருக்கிறார். இதற்காக, நடிகர் விஷாலிடம் அவர் பேச, அந்த படத்தில் நானே நடிக்கிறேன் என கூறியிருக்கிறார். படத்தை தானே தயாரிக்கலாம் […]

நடிகர் விஷாலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு

சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் பணியாளர்களிடம் பிடித்த செய்த டி.டி.எஸ். தொகை வருமான வரித்துறைக்கு செலுத்தப்படவில்லை என்றும் இது தொடர்பான வருமான வரித்துறை நோட்டீசுக்கு விஷால் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து விஷால் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் விஷால் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் விஷால் ஆஜராகாத நிலையில், சம்மன் […]

நடிகர் விஷாலுக்கு எதிராக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு

நடிகர் விஷால்,1 கோடி ரூபாய் சேவை வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையை, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு, நடிகர் விஷாலின் அலுவலகத்தில் சேவை வரித்துறையினர் நடத்திய சோதனையில், அவர் ஒரு கோடி ரூபாய் சேவை வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து விஷாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவரது தரப்பில் பதிலளிக்கப்படாததால் அவர் மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]

கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு திரட்டியா! பாண்டவர் அணியினர்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் சென்னை, ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு திரட்டினர். இதைத்தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனை பாண்டவர் அணியை சேர்ந்த விஷால் உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு கோரினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விஷால், சரத்குமாரை விமர்சித்து […]

நடிகர் விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி சரத்குமார் !?

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யும், பாக்கியராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கரதாஸ்’ அணியும் களம் இறங்குகிறார்கள். விஷால் தனது பாண்டவர் அணியை ப்ரொமோட் செய்யும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்க்கு கண்டம் கூறும்வகையில் , சரத் குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியிடமிருந்து விஷாலுக்கு எதிரான கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், “விஷால், உன்னுடைய சமீபத்திய வீடியோ என்னை வருத்தமடையச் […]

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணி!!?

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தச் சங்கத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில், தலைவர் பதவிக்கு நாசரும், பொது செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். துணை தலைவர்கள் பதவிக்கு பூச்சிமுருகன், கருணாஸ் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஸ்ரீமன், பசுபதி, […]

விஷாலுக்கு ஜோடியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்? !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இயக்குனர் வெங்கட் மோகன்இயக்கத்தில் விஷால் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் அயோக்யா. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், சனா கான், யோகி பாபு, ராகுல் தாத்தா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டுருக்கிறது. இதைத்தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக உள்ளதாகவும் எந்த படத்தை […]
Page 1 of 712345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news