Tag Archives: inandoutCinema

மதுரையில் விஜய் அறிமுகக் காட்சி படப்பிடிப்பு ?

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’. இப்படத்தின் இசை வெளியீடு கடந்த வாரம் வெளியானது. படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டாலும் இன்னும் விஜய்யின் அறிமுகக் காட்சியைப் படமாக்கவில்லையாம். அதற்காக மதுரையில் ஒரு முக்கிய கல்லூரியில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று அட்லீ விருப்பப்பட்டுள்ளாராம். அந்தக் காட்சியைப் படமாக்க சுமார் இரண்டாயிரம் துணை நடிகர்கள் வரை கலந்து கொள்ள வேண்டுமாம். அவ்வளவு துணை நடிகர்களை வைத்துக் கொண்டு மதுரையில் படப்பிடிப்பு நடத்துவதை […]

தொழில் அதிபராகும் தீபிகா!

திருமணத்துக்கு பின், தீபிகா படுகோனேவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டன. 2018ல், பத்மாவதி படம் மட்டுமே, அவர் நடிப்பில் வெளியானது. இந்தாண்டு, இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை.  வாய்ப்பு குறைந்ததுமே, தீபிகா, சுதாரிக்க துவங்கி விட்டார். தான் சம்பாதித்ததை எல்லாம், பாதுகாப்பான தொழில்களில் முதலீடு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதில், தன் கணவர் ரன்வீர் சிங்கை, அவர் சேர்க்கவில்லை. தன், தாய் மற்றும் தந்தை என, பிறந்த வீட்டு உறுப்பினர்களுடன் இணைந்து தான், இந்த முயற்சியில் அவர் […]

தெலுங்கிலும் கவனம் செலுத்தும் லைலா

விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தில் தமிழில் அறிமுகமானவர் லைலா. அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர், திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கைக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில், 13 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தமிழில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் மணி சந்துரு இயக்கும் ஆலிஸ் என்ற படத்தில் நடிக்கிறார் லைலா. ரைசா வில்சன் நாயகியாக நடிக்கிறார். அடுத்து தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடிக்கப் போவதாகவும், அதற்காக சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் […]

ஹிட் அடிக்கும் பூஜா ஹெக்டே!!

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. மும்பையை சேர்ந்தவர் என்றாலும் இவரது திரையுலக அறிமுகமே முகமூடி படத்தின் மூலம் தான் நிகழ்ந்தது. ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியதால் சில வருடங்கள் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார். அதன்பிறகு 2018ல் இவர் நடித்த படங்கள் ஓரளவு வரவேற்பு பெறவே, 2019-ல் வெளியான மகரிஷி படத்தில் மகேஷ்பாபுவுக்கும், அரவிந்த சமேத வீர ராகவா என்கிற படத்தில் […]

மீண்டும் ஸ்வாதியை தேடிவந்த வாய்ப்பு

சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சுவாதி, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஜெயசூர்யாவை நடிப்பில் மலையாளத்தில் உருவாகிவரும் திருச்சூர் பூரம் என்கிற படத்தில் முதலில் கதாநாயகியாக ஸ்வாதி தான் பேசப்பட்டார். ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை, அதன்பிறகு அந்த படத்தில் நாயகியாக அனு சித்தாரா நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஸ்வாதியே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதை தயாரிப்பாளர் விஜய்பாபு உறுதி […]

தெலுங்குப் படத்தில் நடிக்க ஆசையாம் – சூர்யா ?

தமிழ்த் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலரும் தெலுங்கில் நேரடிப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஆரம்ப காலத்திலேயே நேரடித் தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்கள். இன்றைய தலைமுறை நடிகர்களில், அஜித் முதன்முதலில் நாயகனாக அறிமுகமானது ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குப் படத்தில்தான். கார்த்தி தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்பட்ட ‘தோழா/ஊப்பிரி’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அப்படத்திற்காக சொந்தக் குரலிலும் தெலுங்கில் டப்பிங் பேசினார். விஜய் சேதுபதி ‘சைரா’ படம் மூலம் அறிமுகமாகிறார். சூர்யா […]

கமல் மீது பண மோசடி புகார் – ஞானவேல் ராஜா!!?

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் பெயரைச் சொன்னாலே அவரை வைத்து படம் தயாரித்த இயக்குனர்கள் அரசல் புரசலாக நெகட்டிவ்வாகத்தான் பேசுவார்கள். அந்தப் பிரச்சினைகளுக்காகவே கமல்ஹாசன் சொந்தப் படங்களைத் தயாரித்து நடித்துக் கொள்வார். ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர் வெளியில் நடிக்க ஆரம்பித்த படமான ‘சபாஷ் நாயுடு, இந்தியன் 2’ ஆகிய படங்கள் பிரச்சினைகளில் சிக்கியதும் சமீபத்திய வரலாறு. கமல்ஹாசன் நடித்து 2015ல் வெளிவந்த ‘உத்தம வில்லன்’ படம் நிதிப் பிரச்சினை காரணமாக வெளியீட்டுச் சிக்கலில் சிக்கியது. அப்போது கமல்ஹாசனுக்கு […]

கவின் வெளியேறினாரா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் கவின். முதலில் அபிராமி, அடுத்து சாக்ஷி, தற்போது லாஸ்லியா என அவர் காதலை வைத்து விளையாடி மற்றவர்களை வெளியேற்ற அதைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், லாஸ்லியாவிடம் மட்டும் கொஞ்சம் கருணையுடன் நடந்து கொள்கிறார். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் பைனலுக்கு முன்பாக 5 லட்ச ரூபாய் எடுத்துக் கொண்டு போட்டியை விட்டு விலகலாம் என பிக்பாஸ் ஒரு சலுகை கொடுப்பார். கடந்த இரண்டு சீசனிலும் யாரும் […]
Page 3 of 106«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news